சேலை கட்டி அழகில் ஹீரோயின்களை மிஞ்சிய அருண் விஜய் மகள் பூர்வி; பொங்கல் கொண்டாட்ட போட்டோஸ்!

நடிகர் அருண் விஜய் மகள் பூர்வி, இந்த ஆண்டு புடவை கட்டிக்கொண்டு பொங்கல் பண்டிகையை வரவேற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அருண் விஜய் தற்போது வெளியிட்டுள்ளார்.
 

Actor Arun Vijay family pongal photos

நடிகர் அருண் விஜய், கோலிவுட் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார். குறிப்பாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவர் நடிப்பில் வெளியான, 'வணங்கான்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் முதல் முறையாக நடித்திருந்த இந்த படம், செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக வெளியானது.

Arun Vijay Celebrate Vanangaan Pongal

பொங்கல் பண்டிகை விடுமுறையில் 'வணங்கான்' ஒருபக்கம் வசூல் வேட்டை ஆடிவரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். அருண் விஜய்க்கு கிடைக்கும் பாராட்டுக்கள் மூலம், சூர்யா இப்படி பட்ட வெற்றி படத்தை தவற விட்டு விட்டாரே... என்று அவருடைய ரசிகர்கள் புலம்பி வருவதையும் பார்க்க முடிகிறது. 'வணங்கான்' திரைப்படம் அருண் விஜய்க்கு மட்டும் இன்றி, இயக்குனர் பாலாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாகவே பார்க்கப்படுகிறது. 

வேஷ்டி சட்டையில் உயிர் - உலகம்; நயன்தாரா கணவருடன் கொண்டாடிய படு ஜோரான பொங்கல்!


Vanangaan Movie Success

'வணங்கான்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக, அப்பா விஜயகுமார் மற்றும் குடும்பத்தினருடன் குடும்ப வழக்கப்படி கொண்டாடியுள்ளார் அருண் விஜய். 

Arun Vijay Family Photos

நடிகர் அருண் விஜய், பொங்கல் பண்டிகையை எப்போதும் அவரின் தந்தை விஜயகுமாரின் சொந்த ஊரான, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள... நாட்டுச்சாலை பகுதியில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி... சென்னையிலேயே  அப்பா - அப்பா மற்றும் மனைவி குழந்தைகளோடு பொங்கல் கொண்டாடியுள்ளார்.

முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

Arun Vijay Wear Traditional Dressing

இதுகுறித்த புகைப்படங்களை அருண் விஜய் வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் அருண் விஜய் மற்றும் அவரின் மகன் பட்டு வேஷ்டி சட்டையில் ஜொலிக்க, அருண் விஜய் மகள் பூர்வி சேலை அழகில் தேவதை போல் ஜொலிக்கிறார். 

Arun Vijay Daughter Look Like heroine

இதுவரை பாவாடை தாவணி மற்றும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் பார்க்கப்பட்ட பூர்வி... இப்போது சேலை கட்டி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்து, ரசிகர்கள் பூர்வி அழகில் ஹீரோயினை மிஞ்சி விட்டார் என கமெண்ட் போட்டு வருவதோடு, தங்களின் பொங்கல் வாழ்த்தையும் அருண் விஜய் குடும்பத்திற்கு தெரிவித்து வருகிறார்கள்.

'தங்கலான்' படத்தை விட பல கோடி அதிகம்! 'வீர தீர சூரன்' படத்திற்கு விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Arun Vijay Family Pongal Worship

கலைக்குடும்பமாக பார்க்கப்படும், விஜயகுமார் குடும்பத்தில்... அனிதா விஜயகுமாரை தவிர மற்ற அனைவரும் நடிகர்கள் தான். அதே போல் அருண் விஜயின் மகனும் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டார். வருங்காலத்தில், அருண் விஜய் மகள் பூர்வி நடிகையாக மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Latest Videos

click me!