Shakeela About Her Marriage
90களில் தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஷகிலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட மொழிகளில் அவர் நடித்துள்ளார். அனைத்து மொழிகளிலுமே அவர்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் மலையாள திரையுலகில் அவர் உச்ச நடிகையாக மாறினார்.
Shakeela About Her Marriage
கேரளாவில் ஷகிலாவின் படம் ரிலீஸ் ஆனால் தங்களின் படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களே பயந்த காலம் இருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான். அந்தளவுக்கு மலையாள திரையுலகில் ஷகிலாவின் படங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. மம்முட்டி, மோகன்லால் படங்களை விட ஷகிலாவின் படங்கள் அதிகம் வசூல் செய்தன.
Shakeela About Her Marriage
கவர்ச்சியான ரோல்களில் நடித்திருந்தாலும், காமெடி, குணச்சித்திர ரோல்களிலும் ஷகிலா நடித்து வந்தார். ஒருகட்டத்தில் கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திய ஷகிலா, தற்போது சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் விஜய் டிவில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷகிலா தான் ஒரு கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தை உடைத்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
Actress Shakeela
தொடர்ந்து அவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எனினும் சில வாரங்களிலேயே அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது யூ டியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை ஷகிலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர் “ திருமணம் செய்து கொண்டு ஒருத்தர் மூஞ்சியையே என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை” என்று தெரிவித்தார். தற்போதைய இளைஞர்களிடம் இதே கருத்து நிலவி வரும் நிலையில், ஷகிலாவும் அதே கருத்தை கூறியுள்ளார்.
Shakeela About Her Marriage
அதே போல் தனது தங்கை தன்னை ஏமாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மொத்த பணத்தையும் தனது தங்கை ஏமாற்றிவிட்டதாகவும், இதனால் ஜீரோவிலிருந்து மீண்டும் தனது வாழ்க்கையை தொடங்கியதாகவும் ஷகிலா கூறியுள்ளார்.