சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா - எந்த படத்தில் தெரியுமா?
பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவர் சினிமாவில் ரஜினிக்கு டூப்பாக நடித்த சம்பவம் பற்றி பார்க்கலாம்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவர் சினிமாவில் ரஜினிக்கு டூப்பாக நடித்த சம்பவம் பற்றி பார்க்கலாம்.
Manoj Bharathiraja act as body double for Rajinikanth : பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் திரையுலகினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 48 வயதிலேயே அவர் உயிரிழந்துள்ளது பாரதிராஜா குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நள்ளிரவு முதல் அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்த படையெடுத்து வருகின்றனர்.
மனோஜ் பாரதிராஜா, தமிழில் நடிகராக தாஜ் மஹால், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சிறுவயதில் இருந்தே தன் தந்தையை போல் இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் நீண்ட நாள் ஆசையாம். அதனால் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ், பின்னர் இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.
வீடியோ : மகனின் மறைவால் உடைந்துபோன பாரதிராஜா; ஆறுதல் சொல்ல படையெடுத்து வந்த பிரபலங்கள்!
ஷங்கர் மற்றும் மணிரத்னத்திடம் இருந்து கிடைத்த அனுபவத்தை வைத்து கடந்த 2023-ம் ஆண்டு மார்கழி திங்கள் என்கிற திரைப்படத்தை இயக்கினார் மனோஜ். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் இதுவாகும். இதுதவிர சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டிருந்தார் மனோஜ் பாரதிராஜா. ஆனால் கடைசி வரை அது நடக்காமல் போனது. மனோஜ் பாரதிராஜா மரணம் அடைந்ததால் அவரைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில், மனோஜ் பாரதிராஜா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு டூப்பாக நடித்த சம்பவம் பற்றி தற்போது பார்க்கலாம். எந்திரன் படத்தில் தான் அவர் ரஜினிக்கு டூப் போட்டுள்ளார். எந்திரன் படத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ், அப்படத்தில் ரஜினி சிட்டி ரோபோவாக ஐஸ்வர்யா ராயுடன் காரில் பயணிக்கும் காட்சியில் ரஜினிக்கு டூப் போட்டு நடித்தவர் மனோஜ் பாரதிராஜா தான். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... எந்த அப்பாவுக்கும் இப்படியொரு நிலைமை வரக் கூடாது – மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு சூரி இரங்கல்!