
பெரிதாக எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கி இன்று நம்பிக்கை நட்சத்திரமாக மாறி உள்ளவர் மணிகண்டன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான முதல் படமான 'குடும்பஸ்தன்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இளம் நடிகராக இருக்கும் மணிகண்டன், 'பீட்சா 2 வில்லா' திரைப்படத்தின் மூலம் துணை இயக்குனராக தன்னுடைய சினிமா கேரியரை துவங்கி, இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா - பாகிஸ்தான் திரைப்படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதை தொடர்ந்து காதலும் கடந்து போகும், எட்டு தோட்டாக்கள், விக்ரம் வேதா, போன்ற படங்களில் நடித்தார். குறிப்பாக விக்ரம் வேதா திரைப்படத்தில் இவர் சிறந்த டயலாக் ரைட்டருக்கான சில விருதுகளையும் பெற்றார்.
திருமணம் எப்போன்னு கேட்டது குத்தமா? சரவெடியாய் பொரிந்து தள்ளிய ஸ்ருதி ஹாசன்!
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'காலா' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகனாக லெனின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த மணிகண்டன், இதைத்தொடர்ந்து சில்லு கருப்பட்டி, நெற்றிக்கண், போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சூர்யா தயாரிப்பில், டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படத்தில், மணிகண்டன் ஏற்று நடித்த ராஜாக்கண்ணு கதாபாத்திரம், இவரை ஒரு சிறந்த பர்ஃபார்மராக பார்க்க வைத்தது. இதைத் தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சமீப காலமாக வெளியான குட் நைட், லவ்வர், போன்ற படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்தது.
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் மணிகண்டன் நடிப்பில், நேற்று வெளியான திரைப்படம் தான் 'குடும்பஸ்தன்'. ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி உள்ள இந்த படத்தை எஸ் வினோத்குமார், சினிமாக்காரன் புரொடக்ஷன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக சான்வி மேகனா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன், பாலாஜி சக்திவேல், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சாகும் முன் பவதாரிணி வெளிப்படுத்திய கடைசி ஆசை! கலங்கியபடி கூறிய கணவர் சபரிராஜ்!
இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, முதல் நாளே தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ஒன்றரை கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வளர்ந்து வரும், ஒரு நடிகரின் படத்துக்கு முதல் நாளே 1.5 கோடி என்பது உண்மையிலேயே நல்ல வசூல் தான் என்பதாலும், இப்படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும்... இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.