தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகராக மட்டுமின்றி இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், என பன்முகத் திறமையாளராக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சிறந்த தொகுப்பாளர் என்பதை நிரூபித்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி, அரசியல்வாதியாகவும் தன்னை தமிழகத்தில் நிலைநிறுத்தி கொள்ள போராடி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, தேர்தலை திமுக கட்சியுடன் இணைந்து கமல் சந்திக்க உள்ளார்.
27
Kamal Hassan Acting and Produced Movies
அரசியல் பணிகள் ஒருபுறம் சென்று கொண்டிருந்தாலும், மற்றொருபுறம் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தன்னை பிசியாக மாற்றி கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தயாரிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் உலக அளவில் 350 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய் பல்லவி கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.
தற்போது இவர், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும் 'தக் ஃலைஃப்' திரைப்படம் பரபரப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தை முடித்த பின்னர் கைவசம் உள்ள சில திரைப்படங்களை தயாரிக்கவும் நடிக்கவும் உள்ளார்.
47
Sruti Haasan Acting Coolie
திரை உலகில் அப்பாவின் பெயர் சொல்லும் மகளாக வளர்ந்து நிற்பவர் தான் ஸ்ருதிஹாசன். தன்னுடைய அப்பாவை போலவே பல விஷயங்களில் ஆர்வம் காட்டும் ஸ்ருதிஹாசன், பாலிவுட் திரை உலகில் ஹீரோயின் ஆக அறிமுகமாக இருந்தாலும், தற்போது பல தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். இவரின் கைவசம் தற்போது சலார் 2 மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் கூலி ஆகிய படங்கள் உள்ளன.
சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன், சமீபத்தில் கூட கொடுத்த பேட்டி ஒன்றில் "ஒருவரை காதலிக்க பிடிக்கும், அவருடன் இணைந்து பயணிக்க பிடிக்கும்... ஆனால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை". என வெளிப்படையாக கூறினார். மேலும் இதுவரை பல காதல் சர்ச்சைகளில் ஸ்ருதி ஹாசன் சிக்கியுள்ளார்.
67
Love Controversy
தெலுங்கு படத்தில் ஒன்றாக நடித்த போது, நடிகர் சித்தார்த்தை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் சில வருடம் லிவிங் டூ கெதர் வாழ்க்கையிலும் இருந்தனர். இதன் பின்னர், தனுஷ், நாக சைதன்யா, லண்டனை சேர்ந்த இசை கலைஞர் மைக்கில், சமீபத்தில் பிரேக் அப் ஆன சாந்தனு வரை... இவரின் காதலர்கள் லிஸ்ட் போய் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் தான் ஸ்ருதி ஹாசனிடம், திருமணம் எப்போது என்று கேட்டு பத்திரிகையாளரை நோக்கி சரவெடி போல் பொரிந்து தள்ளியுள்ளார். "ஏன் என் கல்யாணத்துக்கு கரண்ட் பில் கட்டப் போறீங்களா? இல்ல சாப்பாடு போட போறீங்களா? இல்ல இன்விடேஷன் ஆவது அடிச்சு கொடுக்க போறீங்களா? இல்லல அப்போ அதை பத்தி கேட்காதீங்க என இவர் பேசி உள்ளது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.