கணவர், 3 குழந்தைகளுடன் திருப்பதியில் செட்டிலாக ஆசை: திருமண ஆசையை வெளிப்படுத்திய ஜான்வி கபூர்!

First Published | Jan 25, 2025, 5:45 AM IST

Janhvi Kapoor Plan to Move Tirupati With Husband and Children after Marriage : நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் தனக்கு திருமணம் எங்கு நடக்க வேண்டும், எத்தனை குழந்தைகள் வேண்டும் என்பது குறித்து தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

Janhvi Kapoor Plan to Move Tirupati With Husband and Children after Marriage

Janhvi Kapoor Plan to Move Tirupati With Husband and Children after Marriage : நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், கல்லூரி படிப்பை முடித்து பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார். முதல் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு, தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க பல படங்களில் நடித்தார். குஞ்சன் சக்சேனா, குட் லக் ஜெர்ரி போன்ற படங்கள் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன. பாலிவுட்டில் 5 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் இளம் நடிகை ஜான்வி கபூர், கடந்த ஆண்டு தென்னிந்திய திரையுலகிலும் அறிமுகமானார். ஜூனியர் NTR நடித்த 'தேவரா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

Janvi Kapoor Marriage Thoughts

அவரது அழகான தோற்றத்திற்கும், நடனத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. ஜூனியர் NTR உடனான ஜோடி ரசிகர்களை ஈர்த்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவரா படத்தைத் தொடர்ந்து, ராம் சரண் உடன் RC 16 படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தை பூஜி பாபு சனா இயக்குகிறார். படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜான்வி கபூரின் திரை வாழ்க்கை ஒருபுறம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் வேளையில், தனது சொந்த வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.


Bollywood Actress Janvi Kapoor Marriage Plan

திருமணம், குழந்தைகள் குறித்து ஜான்வி கபூர் பேசியுள்ளார். ஜான்வி கபூரின் ஆசையைப் பார்த்து ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சமீபத்தில், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்வி கபூர், திருமணம் குறித்த சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தனது ஆசை. கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் திருப்பதியில் குடியேற வேண்டும் என்று கூறியுள்ளார். கணவர், குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். தினமும் வாழை இலையில் சாப்பிட்டு, கோவிந்தனை கோவிந்தா என்று அழைக்க வேண்டும் என்பது ஆசை என்று ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

Janvi Kapoor Ready to Move Tirupati

இதன் மூலம் ஜான்விக்கு வெங்கடேஸ்வர சுவாமி மீது எவ்வளவு பக்தி இருக்கிறது என்பது தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜான்வி கபூர் தனது அன்புக்குரியவர்களுடன் திருமலைக்குச் சென்று வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த நடிகைகைளில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் ஒருவர். தடக் என்ற படத்தில் ஆரம்பித்த ஜான்வி கபூரின் சினிமா வாழ்க்கை இப்போது பரம் சுந்தரி என்ற படம் வரையில் வந்துள்ளது. தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவிலும் கால் பதிக்க தொடங்கியிருக்கிறார். விரைவில், கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் என்று ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Janvi Kapoor Upcoming Movies

மறைந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் மொத்தமாக 269 படங்கள் வரையில் நடித்துள்ளார். இதில் தமிழில் மட்டும் அவர் 74 படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகைகளில் ஸ்ரீதேவியும் ஒருவர் தான். கந்தன் கருணை படத்தில் முருகப் பெருமான் அவதாரத்தில் காட்சியளித்தார். இதே போன்று துணைவன், ஆதி பராசக்தி, அகத்தியர் ஆகிய படங்களில் முருகன் அவதாரத்திலேயே நடித்திருந்தார். சபதம் படத்தில் மட்டும் கிருஷ்ணர் அவதாரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!