Lyricist Vaali
கவிஞர் வாலியைப் பற்றி தெரியாத விஷயங்கள் ஏராளம். 5 நிமிடத்தில் கூட பாடல் வரிகள் எழுதி கொடுப்பதில் கில்லாடி. கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். இதில் ஏராளமான பாடல்கள், ஹிட் பாடல்கள். அவர், கோபமாக இருக்கும் போதும் சரி, சந்தோஷம், சோகமான தருணங்களில் என்று பல சந்தர்ப்பங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
Kadhalan Movie
ஷங்கரின் ஜென்டில்மேன் படத்தில் பணியாற்றிய வாலி, அதன் பிறகு ஷங்கருடன் இணைந்து பல பாடல்களில் பணியாற்றியுள்ளார். வாலியின் பாடல்கள் தான் வேண்டும் என, ஷங்கர் 2 நாட்கள் வரை 100-க்கும் மேற்பட்ட கலைஞர்களை காக்க வைத்தவர். இதை ஒரு பேட்டியில் வாலியே தெரிவித்துள்ளார்.
Prabhu deva
காதலன் படத்தில் எழுதிய ஒரு சுவாரஸ்ய பாடல் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, எஸ் பி பாலசுப்பிரமணியன், ரகுவரன், நக்மா, மனோரமா என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் காதலன். இந்தப் படம் மட்டுமின்றி படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதற்கு காரணம் கவிஞர் வாலி. இவரது காவியத்தில் சிறப்பு சேர்ந்த படங்களில் காதலன் படமும் ஒன்று. இந்தப் படத்தில் இடம் பெற்ற முக்காலா முக்காப்புலா என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்களால் ரசிக்க கூடிய ஒரு எனெர்ஜிடிக் பாடலாக இருந்து வருகிறது.
பல கோடிக்கு அதிபதி; ராஜவாழ்க்கை வாழும் தேசிய விருது இசையமைப்பாளர் இமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
AR Rahman
இந்த பாடலின் ஹிட்டுக்கு வாலி ஒரு காரணம் என்றால், அதன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் ஒரு காரணம். இந்த படத்திற்கு இடம்பெற்ற 'முக்காலா முக்காப்புலா' பாடலை பின்னணி பாடகர் மனோ பரோட்டா சாப்பிடும் கேப்பில் வாலி எழுதி விட்டார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அது தான் உண்மை. பாடலின் சுச்சுவேஷன் மற்றும் எப்படி பட்ட பாடல் வேண்டும் என ரகுமான் கூற, மனோவும் ஸ்டுடியோவில் தான் இருந்துள்ளார்.