கத்தி குத்து சம்பவம்; பல சந்தேகங்களை எழுப்பிய சைஃப் அலிகானின் வாக்கு மூலம்!

First Published | Jan 24, 2025, 5:48 PM IST

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தனது பந்த்ரா இல்லத்தில், பங்களாதேஷை சேர்ந்த நபரால் தாக்குதலுக்கு ஆளான சம்பவம் குறித்து, மும்பை காவல் துறையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

Saif Ali Khan

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தனது பந்த்ரா இல்லத்தில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (நேற்று)  இரவு அவரது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர். சைஃப் அலி கான் இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் விரிவான தகவல்களை அளித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

Kareena Kapoor Khan

சம்பவம் நடந்த அந்த, பாந்தராவில் உள்ள சட்குரு சரண் கட்டிடத்தின், 11வது மாடியில் உள்ள தனது வீட்டின் பெட் ரூமில், மனைவி நடிகை கரீனா கபூர் கானும் பேசி கொண்டிருந்ததாகவும், திடீரென தங்கள் இளைய மகன் ஜஹாங்கீரை பார்த்து கொள்ளும் பணிப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.

கேம் சேஞ்சர் OTT: ரிலீஸ் எப்போது; எந்த தளத்தில் வெளியாகிறது?
 


Saif Ali Khan Shocking Statement

உடனடியாக தங்கள் மகனின் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு அவர்கள் அந்த கொள்ளையனின் பிடியில் இருந்தனர். பணிப்பெண் எலியாமா பிலிப்ஸ் பயந்து அலறிக்கொண்டிருந்தார், ஜெஹ் பயந்து அழுதான்.
 

Police investigation

நான் அந்த கொள்ளையனை தடுக்க முயன்றபோது, அந்த நபர் எனது முதுகு, கழுத்து மற்றும் கைகளில் பலமுறை குத்தினார் என்று கூறியுள்ளார். காயங்கள் இருந்தபோதிலும், நடிகர் அந்த நபரை அறைக்குள் தள்ள முடிந்தது, அதே நேரத்தில் பிலிப்ஸ் ஜெஹ்வை அழைத்துக்கொண்டு பாதுகாப்பிற்காக மற்றொரு அறையில் தன்னைப் பூட்டிக்கொண்டார்.

பல கோடிக்கு அதிபதி; ராஜவாழ்க்கை வாழும் தேசிய விருது இசையமைப்பாளர் இமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
 

Saif Ali Khan Attack

அந்த நபர் தன்னிடம் ஒரு கோடி கேட்டு மிரட்டியதாகவும் சைப் அலிகான் கூறியுள்ளார். தன்னுடைய வீட்டில் பணியாற்றியவர்கள் அந்த கொள்ளையனை பூட்டிய அறையை திறந்து பார்த்தபோது அவன் அங்கிருந்து எப்படியோ தப்பி சென்று விட்டார் என கூறியுள்ளார். பின்னர், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டவரான ஷெரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது ரோஹில்லா அமீன் ஃபகீர் (30) என்ற விஜய் தாஸை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 

Saif Ali khan Statement

சைஃப் அலிகானின் இந்த வாக்குமூலம் வெளியாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் பல கேள்விகளை முன்விது வருகிறார்கள். பல கோடிக்கு அதிபதியாக இருக்கும் சைஃப் அலிகான் பல சொகுசு கார்கள் வைத்திருந்தும் ஏன் அவர் ஆட்டோவில் வந்தார். மனைவி கரீனா கபூர் மருத்துவமனைக்கு இவரை அழைத்து செல்லாமல், 7 வயது மகன் அழைத்து செல்ல காரணம் என்ன என பல கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இதற்க்கு சைப் அலிகான் என்ன பதிலளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆத்தாடி விஷாலின் மதகஜராஜா படத்தை பந்தாட இந்த வாரம் ரிலீஸ் ஆகும் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள்!
 

Latest Videos

click me!