Shankar and Ram Charan
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்,.ராம் சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் ஆக்ஷன் த்ரில்லராக வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், முதல் நாளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததன் விளைவாக இந்த படத்தின் வசூல் சரியாய் துவங்கியது.
400 Cr Budget
கேம் சேஞ்சர் படத்தில் நல்ல கதை மற்றும் ஆழமான கருத்து இருந்தாலும், இந்த படத்திற்கு 400 கோடி செலவு செய்வது எடுப்பதற்கான ஒரு படம் இல்லை என்பதே பல ரசிகர்களின் கருத்து. ஒருவேளை இந்த படத்தை 100 கோடியில் இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தால், இந்த படம் கண்டிப்பாக வெற்றி படமாக அமைந்திருக்கும். அதே போல் எப்போதும் புதுமையான தொழில்நுட்பங்களை தன்னுடைய படங்களில் அறிமுகம் செய்து, ரசிகர்களை பிரமிக்க வைக்கும் இயக்குனர் ஷங்கர் அப்படி ஒரு மேஜிக்கை இந்த படத்தில் நிகழ்த்த தவறி விட்டார்.
பல கோடிக்கு அதிபதி; ராஜவாழ்க்கை வாழும் தேசிய விருது இசையமைப்பாளர் இமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Game Changer OTT Release
தற்போது கேம் சேஞ்சர் திரைப்படத்தின், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அமேசான் பிரைம் OTT தளம் தான் கேம் சேஞ்சர் படத்தின், உரிமையை பெற்றுளளது. ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்கில் பான் இந்தியா படமாக வெளியான இந்த படம், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பிப்ரவரி 14 அல்லது 15 ஆம் ஹிந்தி அன்று கேம் சேஞ்சர் படத்தை, ஸ்ட்ரீம் செய்ய பிரைம் வீடியோ திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
Game Changer OTT
கேம் சேஞ்சர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே... இப்படத்தின் HD பிரிண்ட் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்து ஓடிடி ரிலீசுக்கு ஆபத்தாக மாறி உள்ளது. இந்த விஷயம் குறித்து படக்குழு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளது. இதன் பின்னணியில் ஒரு கும்பல் இருப்பதாகவும், வெளியீட்டிற்கு முன்பே ஆன்லைனில் லீக் செய்ய போவதாக தங்களுக்கு மிரட்டல் வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்தாடி விஷாலின் மதகஜராஜா படத்தை பந்தாட இந்த வாரம் ரிலீஸ் ஆகும் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள்!
Game Changer Loss
கேம் சேஞ்சர் திரைப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு, மற்றும் சிரிஷ் ஆகியோர் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். இதுவரை 130 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ள இந்த படம், போட்ட பணத்தை கூட மீட்டெடுக்க முடியாமல் திரையரங்கில் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.