Bhavatharini Raja
தமிழ் சினிமாவின் இசைஞானியான இளையராஜாவிற்கு 2 மகன்கள். கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா. பவதாரணி என்ற ஒரு மகள் இருந்தார். அவர் கடந்த ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். பவதாரிணி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் வந்த காதலுக்கு மரியாதை படத்தில் இடம் பெற்ற இது சங்கீத திருநாளோ என்ற பாடலை இவர் தான் பாடியிருக்கிறார்.
Bhavatharini With Brothers
குறிப்பாக அப்பா இளையராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரது இசையிலும் பல பாடல்கள் பாடியிருக்கிறார். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அப்பா இளையராஜா இசையில் பாரதி படத்தில் அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் பெற்றார் என்பது தான.
Bhavatharini Husband Sabariraj
இந்த நிலையில் தான் பவதாரணியின் கணவர் சபரிராஜ் பவதாரணி கடைசியாக ஆசைப்பட்ட விஷயம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பவதாரணிக்கு உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றோம். அங்கு மிகவும் உடல்நிலை மோசமடைய மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப தயாராகி வந்தோம்.
Bhavatharini Last Wish
அந்த நேரத்தில் தான் இசை நிகழ்ச்சிக்கு இளையராஜா இலங்கை வருவதாக இருந்தது. அப்போது அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் ஆசைப்பட்டபடியே அவரது அப்பா இளையராஜாவை பார்த்தார். ஆனால், அதுவே அவரது கடைசி ஆசையாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
காஃபி குடிச்சே வெயிட் லாஸ் பண்ணிய ஜான்வி கபூர்; அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?