இதில் தற்போது மாளவிகா மோகனனும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். மிக பிரமாண்டமாக உருவாகி வரும் 'தங்கலான்' படத்தை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தை ஆஸ்கர், கேன்ஸ், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருது விழாவிற்கு அனுப்ப படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.