பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சலார். யாஷ் நடித்த கே.ஜி.எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் பிரித்விராஜும் சலார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சலார் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
24
salaar
இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர உள்ளனர். இப்படத்தை நடிகர் பிரபாஸ் மலைபோல் நம்பி உள்ளார். ஏனெனில் பாகுபலி 2 படத்திற்கு பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்தன. அவர் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்கில் ஓடி வந்தாலும், அப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதளபாதாளத்திற்கு சென்று வருவதால் அப்படமும் பிளாப் ஆகிவிடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சலார் திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் இவ்வளவு நாள் சீக்ரெட் ஆக வைக்கப்பட்டு இருந்ததால், திமிரு படத்தைப் போல் இதிலும் மாஸ் ஆன வில்லி கேரக்டராக இருக்குமோ என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். சலார் படத்தில் அவர் நடித்துள்ள காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளது.
44
shriya reddy
இதையடுத்து ஷூட்டிங் நிறைவடைந்ததும், தன்னுடைய உதவியாளர்களுக்கு நடிகை ஸ்ரேயா ரெட்டி, தங்க நாணயம் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகை ஸ்ரேயா ரெட்டியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாணின் ஓஜி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ஸ்ரேயா ரெட்டி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.