மலையாள திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர், அவ்வப்போது தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அசுரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் மலையாள சினிமா பக்கம் ஒதுங்கினார் மஞ்சு வாரியர்.
24
Ajith, Manju warrier
இதையடுத்து 5 ஆண்டு இடைவெளிக்கு பின் அவர் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்த திரைப்படம் தான் துணிவு. எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் நடிகர் அஜித் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்திருந்தார் மஞ்சு வாரியர். இதில் ஆக்ஷன் ஹீரோயினாக மிரட்டி இருந்த மஞ்சு வாரியரின் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த இப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.
தமிழில் நடித்த இரண்டு படங்களும் ஹிட் ஆனதால், அடுத்தடுத்து கோலிவுட்டில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ள மஞ்சு வாரியர், தற்போது புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். அதன்படி அவர் ஆர்யா நடிப்பில் உருவாகும் மிஸ்டர் எக்ஸ் என்கிற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது. மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தை மனு ஆனந்த் இயக்க உள்ளார்.
44
Manju warrier
மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் தான் மிஸ்டர் எக்ஸ் படத்தையும் இயக்குகிறார். இவர் இயக்குனர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் மஞ்சு வாரியருக்கு தமிழில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.