சினிமாவில் சென்டிமெண்ட் பார்ப்பது வழக்கம். நடிகர், நடிகைகளுக்கு சரி வர பட வாய்ப்புகள் அமையவில்லை என்றால் அவர்கள் ஜோசியம் பார்த்து பெயரை மாற்றிக்கொண்ட சம்பவங்களும் அதிகளவில் உண்டு. குறிப்பாக கவர்ச்சிகரமான பெயர்களை தான் சினிமா பிரபலங்கள் வைத்துக்கொள்வார்கள். அப்படி சினிமாவிற்காக பெயரை மாற்றிக்கொண்டு நடித்து வரும் நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நயன்தாரா
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் டாப் நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் சினிமாவுக்காக பெயரை மாற்றிக்கொண்டவர். தான் இவரின் ஒரிஜினல் பெயர் டயானா மரியம் குரியன் ஆகும். இவர் சினிமாவுக்காக தன் பெயரை நயன்தாரா என மாற்றிக்கொண்டார்.
அனுஷ்கா ஷெட்டி
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஸ்வீட்டி ஷெட்டி. சினிமாவுக்கு அவர் தனது பெயரை அனுஷ்கா ஷெட்டி என மாற்றிக்கொண்டார். இருப்பினும் அவருடன் நெருங்கி பழகும் நடிகர், நடிகைகள் அவரை ஸ்வீட்டி என்றே அழைப்பர்.
அமலா பால்
நடிகை அமலாபால் தமிழில் சாமி இயக்கிய சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்போது அப்படத்தின் இயக்குனர் சொன்னதால் சினிமாவுக்காக தனது பெயரை அனகா என மாற்றிக்கொண்டார். அப்படம் பிளாப் ஆனதால் அந்த பெயர் ராசியில்லை என கூறி தனது ஒரிஜினல் பெயரான அமலா பால் என்பதையே மீண்டும் பயன்படுத்த தொடங்கினார்.
ரம்யா
குத்து படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானதால் ரசிகர்களால் குத்து ரம்யா என்று அழைக்கப்படுபவர் திவ்யா ஸ்பந்தனா. தெலுங்கில் திவ்யா ஸ்பந்தனா என்கிற பெயருடன் நடித்து வந்த இவர், தமிழில் அறிமுகமானதும் ரம்யா என பெயரை மாற்றிக்கொண்டார். பின்னர் வாரணம் ஆயிரம் படத்தில் வெறுமன திவ்யா என்கிற பெயருடன் மட்டும் குறிப்பிடப்பட்ட அவர் தற்போது தனது ஒரிஜினல் பெயரையே மீண்டும் வைத்துக்கொண்டார்.
சுனைனா
நடிகை சுனைனா, ஜோசியரின் பேச்சைக்கேட்டு தனது பெயரை கடந்த 2013-ம் ஆண்டு அனுஷா என மாற்றிக்கொண்டார். இந்த பெயர் மாற்றம் அவருக்கு திருப்புமுனையை தராததால், மீண்டும் சுனைனா என்கிற தனது ஒரிஜினல் பெயரை வைத்துக்கொண்ட அவர் தனது பெயரில் ஒரு A மட்டும் கூடுதலாக சேர்த்துக்கொண்டார்.
மீரா ஜாஸ்மின்
தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மீரா ஜாஸ்மின். இவரின் ஒரிஜினல் பெயர் ஜாஸ்மின் மீரா, அவர் சினிமாவுக்காக அப்பெயரை மீரா ஜாஸ்மின் என மாற்றி வைத்துக்கொண்டார்.
நக்மா
நடிகையும் அரசியல்வாதியுமான நக்மாவின் ஒரிஜினல் பெயர் நந்திதா அரவிந்த் மோரார்ஜி. அவர் சினிமாவுக்காக தான் தன் பெயரை நக்மா என மாற்றிக்கொண்டார். அந்த பெயர் மாற்றத்தால் ரஜினியுடன் பாட்ஷா, ஷங்கர் இயக்கிய காதலன் போன்ற வெற்றிப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
அஞ்சலி
நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க சில ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் ஒரிஜினல் பெயர் பால திரிபுர சுந்தரியாம். சினிமாவுக்காக தான் அவர் தன் பெயரை அஞ்சலி என மாற்றிக்கொண்டாராம். இவர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ரம்பா
90-களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ரம்பா. இவரும் பெயரை மாற்றிக்கொண்டு தான் சினிமாவில் நடித்தாராம். இவரது ஒரிஜினல் பெயர் விஜயலட்சுமியாம். சினிமாவுக்காக தான் ரம்பா என மாற்றிக்கொண்டாராம்.