நடிகர் கமல்ஹாசனின் மகளான் ஸ்ருதிஹாசன், தந்தையைப் போல் சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஸ்ருதி, அடுத்தடுத்து விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் படிப்படியாக கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்ததால் குட் பாய் சொல்லிவிட்டு பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.