பேத்தி பிறந்த சந்தோஷத்தில் சிரஞ்சீவி.! குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு படையெடுத்த பிரபலங்கள்.! போட்டோஸ்..!

Published : Jun 20, 2023, 10:00 PM IST

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் ராம்சரண் - உபாசானா சார்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.  

PREV
110
பேத்தி பிறந்த சந்தோஷத்தில் சிரஞ்சீவி.! குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு படையெடுத்த பிரபலங்கள்.! போட்டோஸ்..!

மெகா பவர் ஸ்டார் ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு இன்று ( ஜூன் 20) பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட உபாசனா ராம்சரணுக்கு இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்தது. 
 

210

இந்த நல்ல செய்தியால் ஸ்டார் குடும்பத்தினர், அவருடைய நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிகர்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். 

பிரபு தேவா மகளின் பெயர் இதுவா... குழந்தை பெயரை வைத்து நயன்தாரா வாழ்க்கையில் மீண்டும் விளையாடுகிறாரா மாஸ்டர்?
 

310

இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் சுமனா மனோகர் பேசுகையில், '' இன்று அதிகாலை உபாசனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை மற்றும் தாய் இருவரும் நலமாக உள்ளனர். அவர்கள் விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவர். தற்போது டாக்டர் ரூமா சின்ஹா உபாசனாவை தொடர்ந்து பரிசோதித்து, ஆலோசனை வழங்கி வருகிறார்'' என்றார். 

410

உபாசானாவிற்கு பேறு காலத்தின் போது ஊட்டச்சத்து தொடர்பான ஆலோசனைகளை வழங்கிய டாக்டர் லதா காஞ்சி பார்த்தசாரதி பேசுகையில், '' கர்ப்ப காலத்தில் உபாசனா தனது உணவு மற்றும் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினார். அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய செயல் காரணமாக பிரசவம் மிகவும் எளிதாக இருந்தது. உபாசனாவும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்'' என்றார். 

'வேட்டையாடு விளையாடு' ரீரிலீஸ் முதல் 'தலைநகரம் 2' வரை இந்த வாரம் திரைக்கு வரும் 8 படங்கள்! முழு விவரம் இதோ.!

510

மெகா ஸ்டார் சிரஞ்சீவி பேத்தி பிறந்த மகிழ்ச்சியை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது  பேசிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி, '' ராம்சரண் - உபாசனா தம்பதியருக்கு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1:49க்கு மகள் பிறந்திருக்கிறார். எங்கள் குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளது. இந்த பெண் குழந்தை எங்களுக்கு மிகவும் முக்கியம். 

610

ராம்சரண் மற்றும் உபாசனாவை பெற்றோர்களாக காண நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றி வைத்திருக்கிறார்.  ராம் சரண் தந்தையானதும் எங்கள் நண்பர்களிடமிருந்தும், உலகெங்கிலும் உள்ள அவருடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் என அனைவரும் அன்பையும், வாழ்த்தையும் பொழிந்து வருகிறார்கள். எங்களின் மகிழ்ச்சியை தங்களுடையதாக உணர்கிறார்கள். இவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக. வாழ்த்தியதற்கும், அன்பை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த நடிகை இயக்குனர் பாலாவின் அண்ணன் மகளா? நடிப்பை தொடர்ந்து தயாரிப்பில் இறங்கிய ரஞ்சனா நாச்சியார்!

710

பெரியோர்களின் கூற்றுப்படி நல்ல நேரத்தில் குழந்தை பிறந்திருக்கிறது. பிறப்பதற்கும் முன்னே நல்ல அறிகுறிகளும் தென்பட்டன. தொழில்துறையில் ராம்சரண் அடைந்த வளர்ச்சி.. அவரது சாதனைகள்... வருண் தேஜின் நிச்சயதார்த்தம்.. என பல விசயங்களை குறிப்பிடலாம். கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களில் எங்கள் வாழ்வில் நல்ல விசயங்கள் நடந்திருக்கின்றன. இவை அனைத்திற்கும் பிறந்த பெண் குழந்தை கொண்டிருக்கும் நேர்நிலையான ஆற்றலே காரணம் என நான் உணர்கிறேன். 

810

எங்கள் குடும்பம் ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை என்பது ஆஞ்சநேயருக்கு உகந்த நாள். மேலும் இந்த நல்ல நாளில் குழந்தை பிறந்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம். அப்பல்லோ மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்கள் குழு பிரசவத்தை குறைபாடற்ற முறையில் கையாண்டது. இதற்காக அனைவருக்கும் நன்றி.'' என ஆனந்த கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மகளுக்கு விரைவில் திருமணம்! 2-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள ரெடி.. பட் இது தான் பிரச்சனை? ரோபோ ஷங்கர் ஓபன் டாக்!

910

சிரஞ்சீவியின் குடும்பத்தில் உள்ளவர்கள் பெருபாலும் திரையுகளை சேர்ந்தவர்கள் என்பதால், காலை முதலே அப்பல்லோ மருத்துவமனைக்கு, சிரஞ்சீவியின் பேத்தியும், ராம் சரணின் குட்டி தேவதையை பார்க்க, அல்லு அர்ஜுன், நிஹாரிகா, உள்ளிட்ட பிரபலங்களும், நபர்களுடன் அடுத்தடுத்து வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.

1010

மேலும் பிரபலங்களை பார்க்க அப்பலோ மருத்துவமனை வாசலில் ஏராளமான ரசிகர்கள் கூடி உள்ளதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Watch: 'லியோ' படத்தில் தளபதி விஜய்யின் குரலில்... தெறிக்கவிடும் 'நா ரெடி' புரோமோ!

Read more Photos on
click me!

Recommended Stories