சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் வந்து சாதித்த பிரபலங்களில் நெல்சனும் ஒருவர். விஜய் டிவி நிகழ்ச்சிகளை இயக்கி வந்த இவர், நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன். இதுவும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதித்தது.
24
Jailer
டாக்டர், கோலமாவு கோகிலா என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நெல்சனுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் தளபதி விஜய்யின் பீஸ்ட். இப்படம் கடந்தாண்டு வெளியாகி விமர்சன ரீதியாக சறுக்கினாலும், ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டியது. பீஸ்ட் படத்திற்கு பின்னர் நெல்சனுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ரஜினிகாந்த் உடன் விநாயகன், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ சங்கர், வஸந்த் ரவி, மிர்ணா, ஷிவ ராஜ்குமார், தமன்னா, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
44
Jailer
ஜெயிலர் படத்தின் பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் இயக்குனர் நெல்சன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில். நெல்சனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜெயிலர் படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.