ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டு... சேலையில் செம்ம அழகாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் - வைரலாகும் போட்டோஸ்

First Published Jan 20, 2023, 1:31 PM IST

பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், சேலையில் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்த மாளவிகாவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாஸ்டர் திரைப்படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர் அடுத்ததாக தனுஷுடன் மாறன் படத்தில் நடித்தார்.

இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற மாளவிகா அங்கு அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார். தற்போது பா,இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மாளவிகா. இப்படத்தில் நாயகனாக விக்ரம் நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்... ரீல் விட்டாரா தில் ராஜு? வாரிசு படம் 210 கோடி வசூலிக்க வாய்ப்பே இல்ல.. அடிச்சு சொல்லும் திருப்பூர் சுப்ரமணியம்

இதேபோல் மலையாளத்திலும் ஒரு படத்தை கைவசம் வைத்துள்ளார், கிறிஸ்டி என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் இளம் நடிகர் மேத்யூ தாமஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மாளவிகா. ஆல்வின் ஹென்ரி இயக்கியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது. அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கிறிஸ்டி படத்தின் புரமோஷனின் போது எடுத்த நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதில் ஜன்னல் வைத்த ஜாக்கெட் போட்டு, சேலையில் செம்ம அழகாக போஸ் கொடுத்துள்ள மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு சோசியல் மீடியாவில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... துணிவு படம் பார்க்க விடாததால்... ஆத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அஜித் ரசிகர்

click me!