இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு பிறகு, தளபதி விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே லோகேஷ், தளபதியை வைத்து, இவர் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'லியோ' படத்தின் மீதான எதிர்பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.
தீபாவளியை குறிவைத்து ரிலீசாக உள்ள 'லியோ' திரைப்படம், ரிலீஸுக்கு முன்பே ஓடிடி, இசை உரிமம் மற்றும் விநியோக உரிமம் என இதுவரை சுமார், ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர் 2015 ஆம் ஆண்டு, மலையாள படமான 'பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழிலும் அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ள மடோனா செபாஸ்டியன் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.