தமிழ் திரை உலகில், முன்னணி நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையோடு விளங்கும் நடிகர் பிரபுதேவா, தன்னுடைய முதல் மனைவி ரமலதாவை, 1995 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிரபுதேவா, நயன்தாராவின் காதல் தோல்விக்கு பின்னர், தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவதிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட்டான ஹிமானி சிங் என்பவரை பிரபு தேவா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், பிரபுதேவாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகும் நிலையில், இப்போது தான் இந்த செய்தி வெளியாகியுள்ளது. மேலும் குழந்தைக்காக வேண்டி கொள்வதற்காக தான், பிரபுதேவா தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் திருப்பதி வந்ததாகவும் கூறப்படுகிறது..
பிரபு தேவா தன்னுடைய ஐம்பது வயதில் இரண்டாவது மனைவியின் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள தகவல், சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதுடன். ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். பிரபு தேவா தற்போது அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.