தமிழ் திரையுலகில் சாக்லேட் பாய் ஆக வலம் வந்தவர் நடிகர் மாதவன். ரன், அலைபாயுதே, ஜே ஜே, போன்ற ரொமாண்டிக் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் மாதவன், பின்னர் பாலிவுட் பக்கம் சென்று அங்கு 3 இடியட்ஸ் படத்தில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்த மாதவன், ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.