பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தார். அப்போது பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்திலும் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான், லுவ்ரே மியூசியத்தில் வைத்து விருந்தளித்தார். இந்த விருந்தில் பிரான்ஸ் மற்றும் இந்திய உணவுகள் பரிமாறப்பட்டன.
24
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கொடுத்த இந்த விருந்தில் நடிகரும், இயக்குனருமான மாதவனும் கலந்துகொண்டார். அப்போது ஒரு அழகிய தருணமும் நிகழ்ந்தது. பிரான்ஸ் அதிபரும், இந்திய பிரதமர் மோடியும் உணவருந்தியபடியே உரையாடிக் கொண்டிருந்த போது, அங்கு சென்ற மாதவன், இருவருடனும் செல்பி எடுக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.
இதற்கு உடனே ஓகே சொன்ன பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், போனை வாங்கி தானே செல்பி எடுத்தார். மோடி மற்றும் மாதவன் அவரது செல்பிக்கு போஸ் கொடுத்த அழகிய தருணம் அரங்கேறியது. இதனால் உற்சாகத்தில் திளைத்து போன மாதவன், இமானுவேல் மேக்ரான் எடுத்த செல்பி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
44
பிரதமர் மோடி மற்றும் இமானுவேல் மேக்ரான் உடன் செல்பி எடுத்த இந்த தருணம் என்றென்றும் என் மனதில் இடம்பிடித்திருக்கும். இருவரின் பணிவும் நம்பமுடியாத பாடத்தை கற்றுத்தந்தது. பிரான்சும் இந்தியாவும் என்றென்றும் ஒன்றாக செழிக்கட்டும் என மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார். மாதவன் பகிர்ந்த இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.