ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை 4 நாட்களில் காலி செய்த மதகஜராஜா!

Published : Jan 16, 2025, 10:19 AM IST

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம் ரஜினிகாந்த் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை நான்கு நாட்களில் முறியடித்துள்ளது.

PREV
15
ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை 4 நாட்களில் காலி செய்த மதகஜராஜா!
Madha Gaja Raja Beat Rajini Movie Lifetime Collection

2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருந்த நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் விலகியதால், இந்த வருட பொங்கல் ரிலீஸில் செம ட்விஸ்ட் ஏற்பட்டது. அஜித் படம் விலகும் முன் வெறும் 3 படங்கள் மட்டுமே பொங்கல் ரேஸில் இருந்த நிலையில், அப்படம் விலகிய பின்னர் மளமளவென பொங்கல் ரேஸ் ஹவுஸ் புல் ஆனது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான், ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை, விஷ்ணு வர்தன் இயக்கிய நேசிப்பாயா மற்றும் விஷாலின் மதகஜராஜா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின.

25
Madha Gaja Raja

இதில் விஷாலின் மதகஜராஜா படம் தான் கடைசியாக பொங்கல் ரேஸில் இணைந்தது. இப்படம் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கிக் கிடந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆவதால் இதற்கு வரவேற்பு கிடைக்குமா என்கிற தயக்கம் படகுழுவினருக்கே இருந்தது. ஆனால் ரிசல்ட் அப்படியே தலைகீழாக மாறியது. இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் சொதப்பினாலும் மதகஜராஜா சர்ப்ரைஸ் வின்னராக மாறி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... வணங்கானை விட 3 மடங்கு அதிக வசூல்; பொங்கல் வின்னர் மத கஜ ராஜா! மொத்த வசூல் இவ்வளவா?

35
Madha Gaja Raja Movie Collection

குடும்பத்தோடு தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் படம் தமிழில் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆகிறது என்றே சொல்லலாம். அந்த குறையை தீர்க்கும் படமாக மதகஜராஜா இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக வந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக மாறி இருக்கிறது. இப்படத்தில் சந்தானம், மனோபாலா ஆகியோரின் காமெடி காட்சிகள் வேறலெவலில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதனால் இப்படம் இந்த ஆண்டின் பொங்கல் வின்னராக மாறி உள்ளது.

45
Madha Gaja Raja Box Office

மதகஜராஜா படம் கடந்த ஜனவரி 12ந் தேதி திரைக்கு வந்ததில் இருந்து அப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ.2.48 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.2.56 கோடியும், பொங்கல் தினத்தன்று ரூ.5.52 கோடியும், மாட்டுப்பொங்கல் அன்று ரூ.6.28 கோடியும் வசூலித்து இதுவரை ஒட்டுமொத்தமாக ரூ.16.84 கோடி வசூலித்து உள்ளது.

55
Madha Gaja Raja, Lal Salaam

இதன்மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை மதகஜராஜா முறியடித்துள்ளது. லால் சலாம் திரைப்படம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாகவே ரூ.16.15 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் மதகஜராஜா திரைப்படம் நான்கு நாட்களில் அந்த வசூல் சாதனையை முறியடித்து மாஸ் காட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... ரஜினி, விஜய் இல்ல; முதன்முதலில் 1000 கோடி வசூல் அள்ளிய தமிழ் ஹீரோவின் சொத்து மதிப்பு இதோ

click me!

Recommended Stories