சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து; திருடனின் வெறிச்செயலால் உயிருக்கு போராடும் நடிகர்!

Published : Jan 16, 2025, 09:33 AM IST

மும்பை பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து; திருடனின் வெறிச்செயலால் உயிருக்கு போராடும் நடிகர்!
Saif Ali Khan

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. வியாழக்கிழமை அதிகாலை மும்பை பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் கொள்ளையன் ஒருவன் உள்ளே நுழைந்ததோடு நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பியதாகவும் கூறப்படுகிறது. நடிகரும் அவரது குடும்பத்தினரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 2:30 மணியளவில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதாம்.

24
Saif Ali Khan Home Robbery

காவல்துறையினர் வெளியிட்ட முதற்கட்ட தகவலின்படி, வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் விழித்தெழுந்த பிறகு கொள்ளையன் தப்பி ஓடிவிட்டானாம். குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மும்பை பந்த்ரா காவல்துறையினர் FIR பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபரைக் கைது செய்ய பல குழுக்கள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ரஜினி, விஜய் இல்ல; முதன்முதலில் 1000 கோடி வசூல் அள்ளிய தமிழ் ஹீரோவின் சொத்து மதிப்பு இதோ

34
Saif Ali Khan Stabbed by Thief

கொள்ளையன் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த நடிகர் சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறாராம். கொள்ளையடிக்க வந்தபோது சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டாரா அல்லது இது ஒரு கொலை முயற்சியா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். பந்த்ரா காவல்துறையும் மும்பை குற்றப்பிரிவும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

44
Saif Ali Khan Hospitalized

மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், சைஃப் அலிகான் அதிகாலை 3:30 மணியளவில் 6 இடங்களில் காயங்களுடன் கொண்டு வரப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு காயங்கள் மிகவும் கடுமையானவை என்றும் தெரிவித்தனர். காயங்களில் ஒன்று அவரது முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. நரம்பியல் நிபுணர் டாக்டர் நிதின் டாங்கே, அழகு சிகிச்சை நிபுணர் டாக்டர் லீனா ஜெயின் மற்றும் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நிஷா காந்தி ஆகியோர் அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். லீலாவதி மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி நிரஜ் உத்தமணி, அறுவை சிகிச்சை முடிந்த பின்னரே சைஃப் அலிகான் உடல்நிலை குறித்து தெரியவரும் என்று கூறி உள்ளார். முன்னணி பாலிவுட் நடிகருக்கு நடந்த கத்தி குத்து சம்பவம் இந்தி திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... கைமாறும் இரும்புக்கை மாயாவி; சூர்யாவை Replace செய்யப்போவது யார் தெரியுமா?

click me!

Recommended Stories