ஒரு ஆங்கில வார்த்தை கூட சேர்க்காமல் பாடல் எழுதி கொடுத்து சாதனை படைத்து வரும் பெண் பாடலாசிரியர்!

First Published | Jan 16, 2025, 9:22 AM IST

Lyricist Thamarai Writing Songs Without English Words in Tamil Cinema : தனது பாடலுக்கு ஆங்கில வார்த்தையே இல்லாமல் பாடல் எழுதி பெண் பாடலாசிரியரான தாமரை சினிமாவில் சாதனை படைத்து வருகிறார்.

Tamil Lyricist Thamarai List Of Movies

Lyricist Thamarai Writing Songs Without English Words in Tamil Cinema : தமிழ் சினிமாவிற்கு கண்ணதாசன், வைரமுத்து, வாலி, கங்கை அமரன் என்று எத்தனையோ மேதைகள் பாடலாசிரியர்களாக கிடைத்திருக்கிறார்கள். அவர்களது வரிசையில் இடம் பெற்றிருப்பவர்களின் பட்டியலில் பெண் பாடலாசிரியராக தாமரையும் இருக்கிறார். டி ராஜேந்தர், சிவகார்த்திகேயன், தனுஷ், சிநேகன், பா விஜய், விவேக், கொத்தமங்கலம் சுப்பு, ஆண்டனி தாசன், தமிழச்சி தங்கபாண்டியன், ரோகினி, சீல் ரோல்டன் என்று பாடலாசிரியர்களை தமிழ் சினிமா கொண்டாடியது.

Unnidathil Ennai Koduthen Movie, Tamil Lyricist Thamarai

காலத்திற்கு ஏற்ப பாடல் வரிகள் அமைத்துக் கொடுப்பதில் இன்றைய பாடலாசிரியர்கள் ஜொலித்து வரும் நிலையில் இதற்கு முன் தமிழ் சினிமாவில் எழுத்தப்பட்ட ஒவ்வொரு பாடல்களும் காலத்தால் அழியாதவையாக இருந்தன. மேலும், பாடல் வரிகளும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. அதற்கு காரணம் பாடலாசிரியர்கள் தான். அதோசு சுத்த தமிழிலும் அவர்கள் பாடல் வரிகள் எழுதிக் கொடுத்தார்கள். அவர்களில் ரொம்பவே முக்கியமானவர்கள் யார் என்றால் கண்ணதாசன், வைரமுத்து, வாலி ஆகியோரை குறிப்பிடலாம்.

Tap to resize

Thamarai Songs, Malligai Poove Songs

இன்றைய காலகட்டங்களில் அப்படி பாடல் வரிகள் அமைத்துக் கொடுக்கும் பாடலாசிரியர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் தான் பாடலாசிரியர் தாமரை. பாடலாசிரியரும், பத்திரிக்கையாளருமான தாமரை தன்னுடைய பாடல்களுக்கு ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் பாடல் வரிகள் எழுதிக் கொடுத்துள்ளார்.

Thamarai Filmography, Thamarai Songs

இனியவளே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், புதுமைப் பெண், கள்ளழகர், ஜேம்ஸ் பாண்டு, வீரநடை, மின்னலே, மாயன் கோப்ரா, வெந்து தணிந்தது காடு, நிறங்கள் மூன்று என்று பல படங்களுக்கு பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். அப்படி அவர் அமைத்து கொடுத்தும் ஒவ்வொரு பாடலிலும் ஒரு ஆங்கில வார்த்தையை கூட அவர் பயன்படுத்தவில்லை. மாறாக ஒவ்வொரு வார்த்தையையும் தேடி பிடித்து சுத்த தமிழில் எழுதியிருக்கிறார்.

Tamil Cinema Lyricists, Thamarai Filmography

இப்படியொரு பாடலாசிரியர் கிடைக்க தமிழ் சினிமா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கடந்த 1998 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2025 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக 50க்கும் அதிகமான பாடல்களுக்கு மேல் வரிகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!