Irumbu Kai Mayavi
மாநகரம் படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக எண்ட்ரி கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர், அடுத்ததாக கைதி என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இதன் பின்னர் விஜய்யை வைத்து மாஸ்டர், கமல்ஹாசன் நடித்த விக்ரம், தளபதியின் லியோ என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து நம்பர் 1 இயக்குனராக மாறினார்.
Lokesh Kanagaraj
தற்போது இவர் டைரக்ஷனில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலர் க்யூவில் காத்திருக்கின்றனர். அந்த அளவுக்கு மவுசுள்ள இயக்குனராக மாறி உள்ளார் லோகி. இவர் இயக்கத்தில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள்.... 1000 கோடி வசூலுக்கு ரெடியான ரஜினிகாந்தின் கூலி; எப்போ ரிலீஸ் தெரியுமா?
Lokesh Kanagaraj, Suriya
கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. கூலி படத்தை முடித்த கையோடு கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது. இதுதவிர அவர் சூர்யாவை வைத்து ரோலக்ஸ் மற்றும் இரும்புக் கை மாயாவி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்குவதாக இருந்தது. ஆனால் அதில் இரும்புக் கை மாயாவி திரைப்படம் தற்போது கைமாறி உள்ளது.
Aamir Khan
அதன்படி இரும்புக் கை மாயாவி திரைப்படத்தில் தற்போது சூர்யாவுக்கு பதில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யாவுக்கு பதில் அமீர்கான் நடிக்க உள்ளதால் இரும்புக் கை மாயாவி திரைப்படம் பான் இந்தியா அளவில் உருவாக உள்ளதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்.... யார்ரா இந்த பையன்? எடுத்த எல்லா படமும் ஹிட்; கோலிவுட்டின் ஜீரோ பிளாப் இயக்குனர்!