விடாமுயற்சி அப்டேட்! அஜித் படத்தின் டிரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published : Jan 15, 2025, 10:33 PM IST

Vidaamuyarchi trailer release date: நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித், திரிஷா இருவரும் ஜோடியாக நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
16
விடாமுயற்சி அப்டேட்! அஜித் படத்தின் டிரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Vidaamuyarchi Movie

நடிகர் அஜித் குமாரின் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நீண்ட காலத்துக்குப் பிறகு திரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆரவ், அர்ஜுன், ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

26
Trisha in Vidamuyarchi

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு  செய்திருக்கிறார். படத்தொகுப்பை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

36
Actor Ajith Kumar in Vidamuyarchi

பொங்கலுக்கு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் திடீரென தள்ளிப்போனது. தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தாமதம் ஆவதாக லைகா தயாரிப்பு கூறியது.

46
Vidamuyarchi Update

இதனால், பொங்கல் பண்டிகையை ஒட்டி அஜித் படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், 'விடாமுயற்சி' ஜனவரி  23ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

56
Vidamuyarchi trailer

விரைவில் விடாமுயற்சி வெளியீட்டுத் தேதி பற்றி படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. ஜனவரி மாதத்திலேயே படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

66
Vidamuyarchi Poster

இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான 'விடாமுயற்சி' அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 'விடாமுயற்சி' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இந்தச் செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories