ஜூன் மாதம் 27ந் தேதி விஜய் ஆண்டனி நடித்த மார்கன் முதல் சூரி நடித்த மாமன் வரை தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் படங்களைப் பற்றி பார்க்கலாம்.
வீக் எண்டு வந்தாலே புதுப்படங்களின் ரிலீஸ் தான் அனைவருக்கும் நியாபகத்துக்கு வரும். கடந்த வாரம் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன நிலையில், இந்த வாரமும் சில படங்கள் தியேட்டரில் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. அதேபோல் ஓடிடியிலும் வார வாரம் புதுப்படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆகி வருகின்றன. அந்த வகையில் வருகிற ஜூன் 27ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள புதுப் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
26
தியேட்டரில் ரிலீசாகும் மார்கன்
இந்த வாரம் தியேட்டரில் மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒன்று விஜய் ஆண்டனி நடித்த மார்கன். இப்படத்தை லியோ ஜான் பால் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் பிரிகிடா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி தான் இசையமைத்துள்ளார். ஜூன் 27ந் தேதி இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.
36
திரைக்கு வரும் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ்
அதேபோல் ஜூன் 27ந் தேதி திரைக்கு வரும் மற்றொரு திரைப்படம் லவ் மேரேஜ். இப்படத்தை ஷண்முகப் பிரியன் இயக்கி உள்ளார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அதேபோல் இந்த வாரம் திரைக்கு வர உள்ள மற்றுமொரு தமிழ் படம் குட் டே புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை அரவிந்தன் இயக்கி உள்ளார். இப்படமும் ஜூன் 27ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
மற்றமொழி படங்களை பொறுத்தவரை ஜூன் 27ந் தேதி தெலுங்கில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி உள்ள கண்ணப்பா என்கிற பிரம்மாண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் பிரபாஸ், காஜல் அகர்வால், மோகன்லால், அக்ஷய் குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். அதேபோல் எஃப் 1 என்கிற ஹாலிவுட் படமும் ஜூன் 27ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
56
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாமன் திரைப்படம் ஜூன் 27ந் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்திருந்தார். அதேபோல் அசாதி என்கிற மலையாள படமும் தமிழ் டப்பிங்கில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் Evol என்கிற தமிழ் படமும் நேரடியாக டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஜூன் 27ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
66
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்
உலகளவில் ரசிகர்களை ஈர்த்த வெப் தொடர்களில் ஸ்குவிட் கேம் என்கிற வெப் தொடரும் ஒன்று. ஹுவங் டங் ஹுயூக் இயக்கிய இந்த வெப் தொடர் இதுவரை இரண்டு சீசன்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு சீசன்களுக்குமே அமோக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ஸ்குவிட் கேம் வெப் தொடரின் மூன்றாவது சீசன் வருகிற ஜூன் 27ந் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இந்த வெப் தொடரின் கடைசி சீசன் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை இந்த தொடரும் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.