மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருந்தன. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட தக் லைஃப் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். ரிலீஸுக்கு முன்பே தக் லைஃப் படத்தின் பாடல்கள் ஹிட் ஆனதால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.
24
சர்ச்சையில் சிக்கிய தக் லைஃப்
அதுமட்டுமின்றி தக் லைஃப் படத்தின் ரிலீஸுக்கு முன் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. கமலின் இந்த கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தை தடை செய்ய உள்ளதாகவும் அறிவித்தனர். இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த சம்பவத்தால் கமலுக்கு ரூ.30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கோர்ட்டில் கூறப்பட்டது. இந்த சர்ச்சையால் தக் லைஃப் படம் நாடு முழுவதும் பேசுபொருள் ஆனது.
34
படுதோல்வியை சந்தித்த தக் லைஃப் திரைப்படம்
இப்படி ரிலீசுக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தியதால் தக் லைஃப் படம் வசூலில் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் ரிசல்ட் அப்படியே உல்டா ஆனது. படத்தை பார்த்த நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அந்த அளவுக்கு படம் சுமாராக இருந்ததாக விமர்சகர்களும் கூறினர். கமலின் கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக தக் லைஃப் மாறியது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி கூட வசூலிக்கவில்லை. இப்படத்தின் தோல்வியால் படக்குழுவும் சோகத்தில் உள்ளதாம். இப்படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தார் கமல். படத்தின் லாபத்தில் இருந்து பங்கு எடுத்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தக் லைஃப் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்னர் தான் ஓடிடியில் வெளியிடுவேன் என கூறி இருந்தார் கமல்ஹாசன். ஆனால் தற்போது படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்தபடி அமையாததால், அப்படத்தை நான்கு வாரத்திலேயே ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம். இதற்காக மல்டிபிளக்ஸ் கவுன்சிலுக்கு ரூ.25 லட்சம் அபராதம் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே போட்ட 8 வார ஒப்பந்தத்தை மீறி உள்ளதால் இந்த அபராத தொகையை செலுத்தி உள்ளார்களாம். இதனால் தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூலை 4ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.