தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் குபேரா. இப்படத்தை சுமார் 120 கோடி பட்ஜெட்டில் உருவாக்கினர். இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த ஜூன் 20ந் தேதி பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. குபேரா திரைப்படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தில் பிச்சைக்காரனாக நடித்திருந்தார் தனுஷ். இப்படத்தின் ரன் டைம் 3 மணிநேரத்திற்கும் மேல் இருந்ததால் தமிழ்நாட்டில் குபேரா படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
24
தெலுங்கில் ஹிட்டான குபேரா
குபேரா படத்திற்கு தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் தெலுங்கில் இப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் சேகர் கம்முலா தான். அவர் தெலுங்கில் ஃபிடா உள்பட பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இதனால் இவரது படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே அங்கு உள்ளது. அதனால் குபேரா படத்தை தெலுங்கு ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இதன்காரணமாக குபேரா படத்திற்கு தமிழ்நாட்டை காட்டிலும் தெலுங்கு மாநிலங்களில் நல்ல வசூல் கிடைத்துள்ளது.
34
தமிழ்நாட்டில் நஷ்டத்தை நோக்கி நகரும் குபேரா
குபேரா திரைப்படம் ரிலீஸ் ஆன ஐந்து நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த 100 கோடி வசூலில் பெரும்பாலானது தெலுங்கு மாநிலங்களில் இருந்து வந்தது தான். தமிழில் இப்படம் 25 கோடி கூட வசூலை எட்டவில்லை. தமிழ்நாட்டில் இப்படம் விநியோகஸ்தருக்கு நஷ்டத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் இதனை தமிழகத்தில் ரிலீஸ் செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி ஷேர் கிடைப்பதே கேள்விக்குறி தானாம். 20 கோடி ஷேர் வந்தால் தான் படம் நஷ்டம் இன்றி தப்பிக்க முடியும் என கூறப்படுகிறது.
குபேரா திரைப்படம் ஆறாம் நாளில் இந்திய அளவில் ரூ.4 கோடி வசூலித்து உள்ளது. வழக்கம் போல் தமிழைக் காட்டிலும் தெலுங்கில் தான் இப்படத்திற்கு அதிக வசூல் கிடைத்துள்ளது. தெலுங்கில் 2.5 கோடி வசூலித்துள்ள இப்படம், தமிழ்நாட்டில் வெறும் 1.13 கோடி தான் வசூலித்தது. ரிலீஸ் ஆனது முதல், நேற்று தான் குபேரா படம் மிகக் கம்மியான வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் தமிழில் மார்கன் உள்பட சில புதுப்படங்கள் திரைக்கு வருவதால் குபேரா படத்தின் வசூல் பிக் அப் ஆவது கடினம் தான் என கூறப்படுகிறது.