கவிஞர் வாலி தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ள வாலி, எம்.எஸ்.வி தொடங்கி அனிருத் வரை பல தலைமுறைக் கலைஞர்களிடம் பணியாற்றி இருக்கிறார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார் வாலி. அவரின் பாடல்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும். அதேபோல் காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டு வந்ததால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி பாடலாசிரியராக கோலோச்சினார் வாலி. அவர் எழுதிய பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன.
25
எம்.எஸ்.வி - வாலி கூட்டணி
பொதுவாக வாலி பாடல் எழுதும் போது குடிக்க மாட்டார். ஆனால் ஒருநாள் அவர் குடிபோதையில் பாடல் எழுத வேண்டிய சூழல் வந்தது. அது என்னவென்றால், வாலி, எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய் படத்திற்கு பாடல் எழுதி இருக்கிறார். அந்தப் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் தான் இசை. அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. அதன் வெற்றிக்கு வாலியின் வரிகளும் முக்கியக் காரணம். அப்போது டாப் தயாரிப்பாளராக இருந்தது ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் தான். அவர் தயாரிக்கும் படங்களில் பணியாற்ற வாலிக்கு வாய்ப்பு கிடைக்காமலே இருந்து வந்தது. ஏவிஎம் படங்களுக்கு கண்ணதாசன் தான் பாடல் எழுதுவார்.
35
வாலிக்கு கிடைத்த ஏவிஎம் பட வாய்ப்பு
ஒரு நாள் காலையில், எம்.எஸ்.விக்கு வாலி, ஒரு பாடல் எழுதிக்கொடுத்திருக்கிறார். பிற்பகலில் ஏதேனும் படம் இருக்கிறதா என வாலி கேட்க, அதற்கு எம்.எஸ்.வி, ஏவிஎம் படம் ஒன்று இருக்கிறது என சொல்லி இருக்கிறார். சரி, ஏவிஎம் படம் என்றால் நமக்கு பாடல் எழுத வாய்ப்பு இருக்காது என நினைத்து வீட்டுக்கு செல்லும் வாலி, மது அருந்திக் கொண்டிருந்தாராம். அப்போது ஏவிஎம் மெய்யப்ப செட்டியார், தான் தயாரிக்கும் படத்திற்கு அவசரமாக ஒரு பாடல் வேண்டும் என கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் தெய்வத்தாய் பட பாடல்களை கேட்டு இம்பிரஸ் ஆன மெய்யப்ப செட்டியார், வாலியை பாடல் எழுத அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்.
அப்போது உதவியாளர் ஒருவர் வாலியின் வீட்டிற்கு சென்று ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு தங்களை பாட்டெழுத மெய்யப்ப செட்டியார் அழைப்பதாக கூறி இருக்கிறார். பொதுவாக குடிபோதையில் இருந்தால் பாட்டு எழுத மாட்டார் வாலி. ஆனால் மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து வந்த முதல் அழைப்பு என்பதால் அதை மிஸ் பண்ணிவிடக் கூடாது என முடிவெடுத்து, மடமடவென குளித்து டிரெஸை மாற்றிக் கொண்டு கிளம்பிவிட்டாராம்.
55
குடிபோதையில் வாலி எழுதிய பாடல்
அப்படி ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் வாலியை அவசர அவசரமாக பாடல் எழுத அழைத்தது சர்வர் சுந்தரம் படத்திற்கு பாடல் எழுத தானாம். அப்படத்தில் தான் நாகேஷ் முதன்முதலில் ஹீரோவாக நடித்திருந்தார். அதில் இடம்பெறும் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்கிற பாடலை தான் வாலி எழுதி இருக்கிறார். பழைய பாடல்கள் என்றால் சிலருக்கு சலிப்படைய செய்யும், ஆனால் இந்தப் பாடலை இன்று கேட்டால் கூட புத்துணர்ச்சியை கொடுக்கும். குடிபோதையில் எழுதினாலும் மிக அற்புதமாக இந்த பாடல் வரிகளை எழுதி இருப்பார் வாலி.