Anushka Shetty Ghaati Movie Salary : ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா. தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் ஜொலித்தார். வேட்டைக்காரன், சிங்கம், சிங்கம் 2, என்னை அறிந்தால், அலெக்ஸ் பாண்டியன், பாகுபலி, பாகுபலி 2 என்று பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2020 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 3 ஆண்டுகள் எந்தப் படத்திலும் அவர் கமிட்டாகவில்லை. அப்போதுதான் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படம் வெளியானது. இந்தப் படத்திற்கு பிறகு இப்போது காட்டி என்ற படம் வெளியாக இருக்கிறது.
24
காட்டி செப்டம்பர் 5 ரிலீஸ்
இயக்குநர் கிரிஸ் ஜெகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு, சைதன்யா ராவ், ஜகபதி பாபு, ஜான் விஜய், விடிவி கணேஷ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் காட்டி. இந்தப் படத்திற்கு நாகவெல்லி வித்யா சாகர் இசையமைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் உருவாகப்பட்ட இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக நடிகர் விக்ரம் பிரபு முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
34
காட்டி கதை
வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு அனுஷ்காவின் காட்டி படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் மதராஸி படமும், பாலாவின் காந்தி கண்ணாடி படமும் வெளியாகிறது. இந்த நிலையில் தான் காட்டி படம் முழுக்க முழுக்க வன்முறைக் காட்சிகள் நிறைந்த ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் ஷீலாவதியாக வரும் அனுஷ்கா ஒரு கஞ்சா வியாபாரியாக நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படம் பழிவாங்கும் மலை வாழ்க்கை கதையை மையமாக கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.
44
முதல் முறையாக தெலுங்கில் அறிமுகமாகும் விக்ரம் பிரபு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ஒரு காலத்தில் ரஜினிகாந்த், விஜய், அஜித், பிரபாஸ் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்த அனுஷ்கா இப்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
அதோடு அவரது சம்பளமும் ரொம்பவே கம்மியாம். காட்டி படத்திற்கு அவருக்கு ரூ.6 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், இந்தப் படத்தில் அவருக்கு சம்பளம் எவ்வளவு என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காட்டி படத்தைத் தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் காத்தனார் படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.