பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிக்காக சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய விஜய் சேதுபதி... அடேங்கப்பா இத்தனை கோடியா?

Published : Sep 03, 2025, 03:52 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனை தொகுத்து வழங்க உள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்க உள்ளார் என்பதை பற்றி பார்க்கலாம்.

PREV
14
Bigg Boss Vijay Sethupathi Salary

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழிலும் கடந்த 2017-ம் ஆண்டு முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வெற்றிகரமாக 8 சீசன்கள் தமிழில் முடிந்துள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ப்ரோமோ வீடியோவை தொகுப்பாளர் விஜய் சேதுபதி அண்மையில் வெளியிட்டிருந்தார். அதோடு புதிய லோகோவையும் பிக்பாஸ் தமிழ் டீம் வெளியிட்டு இருந்தது.

24
பிக் பாஸ் சீசன் 9

அக்டோபர் 5 ஆம் தேதி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ப்ரோமோ வெளியானதைத் தொடர்ந்து, கமல்ஹாசனை மிஸ் செய்கிறோம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சீசன் 8 முதல் விஜய் சேதுபதி தமிழ் பிக்பாஸின் தொகுப்பாளராக உள்ளார். கமல்ஹாசனை விட விஜய் சேதுபதி சிறந்த தொகுப்பாளர் என்று பார்வையாளர்கள் பலரும் கூறினர். சீசன் 8 இன் முதல் எபிசோடில் இருந்தே விஜய் சேதுபதிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. போட்டியாளர்களிடம் வெளிப்படையாகப் பேசும் விஜய் சேதுபதியின் பாணி மிகவும் பிரபலமானது.

34
தொகுப்பாளராக தொடரும் விஜய் சேதுபதி

புதிய சீசனிலும் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருப்பார் என்று ஏற்கனவே கூறப்பட்டது. ஒவ்வொரு எபிசோடிலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பெற்ற டிஆர்பி ரேட்டிங்குகளே இந்த முடிவுக்கு முக்கிய காரணம். பிக்பாஸ் சீசன் 8 இறுதி நிகழ்ச்சிக்கும் சிறப்பான டிஆர்பி ரேட்டிங் கிடைத்தது. இந்த சீசனின் இறுதி நிகழ்ச்சிக்கு மட்டும் 6.88 டிஆர்பி ரேட்டிங் கிடைத்தது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இறுதி நிகழ்ச்சியை விட இது அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
பிக் பாஸ் விஜய் சேதுபதி சம்பளம்

இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு வாரி வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூ.60 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருந்தது. அந்த சீசன் ஹிட்டானதை தொடர்ந்து தற்போது 9-வது சீசனுக்கு தன்னுடைய சம்பளத்தை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூ.75 கோடி சம்பளம் வழங்கப்பட இருக்கிறதாம். படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி ரூ.25 கோடி வாங்கி வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதைவிட கூடுதலாக 50 கோடி வாங்குவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories