அறிவுக்கரசி போட்ட டீலிங்.. ஜீவானந்தம், பார்கவிக்கு நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி - எதிர்நீச்சல் 2 சீரியல்

Published : Sep 03, 2025, 11:43 AM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், பார்கவி மற்றும் ஜீவானந்தத்துக்கு நள்ளிரவில் ஒரு அதிர்ச்சி சம்பவம், காத்திருக்கிறது.

PREV
14
Ethirneechal Thodargiradhu Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சூட்டிங் ஆர்டர் உடன் ஜீவானந்தம் மற்றும் பார்கவியை புலிகேசி தலைமையிலான தனிப்படை போலீஸ் துரத்தி வருகிறது. கொடைக்கானலில் ஜீவானந்தம் இருக்கும் தகவல் அறிந்து வந்த புலிகேசியிடம் இருந்து, ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆகிறார் ஜீவானந்தம். சினிமாவை போல் சேஸிங் செய்தும் கடைசியில் கோட்டைவிட்டு விட்டார் புலிகேசி. பின்னர் பார்கவி உடன் மலைப் பாதையில், தன்னுடைய பழைய வீட்டுக்கு செல்கிறார் ஜீவானந்தம். தன்னுடைய மனைவி இறந்த பின்னர் அந்த வீட்டை பெங்களூருவில் இருக்கும் தன்னுடைய நண்பனுக்கு விற்றுவிட்டதாக பார்கவியிடம் கூறுகிறார் ஜீவானந்தம்.

24
பார்கவிக்கு சீர் கொடுத்த ஜீவானந்தம்

இரண்டு நாட்கள் தங்கிவிட்டு அங்கிருந்து கிளம்ப இருவரும் திட்டமிடுகிறார்கள். இதனிடையே தன்னுடைய பையில் இருந்து நகைகள் மற்றும் பட்டுப்புடவையை எடுத்து பார்கவியிடம் கொடுக்கிறார் ஜீவானந்தம். அவையெல்லாம் தன்னுடைய மனைவியின் நகை என்றும், அதை உனது திருமணத்துக்கு பயன்படுத்திக் கொள் என சொல்கிறார். நீயும் என்னுடைய மகள் தான், உனக்கு உன்னுடைய அப்பா இருந்து என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதேபோல் நான் உன்னுடைய திருமணத்துக்கு செய்யும் சீர் ஆக இதை எடுத்துக்கொள் என கூறுகிறார் ஜீவானந்தம். பார்கவியும் அதை பெற்றுக் கொள்கிறார்.

34
அன்புக்கரசி - புலிகேசி இடையே நடந்த டீலிங்

மறுபுறம் மண்டபத்தில் ஜனனி, ஜீவானந்தம் என யார் வந்தாலும் உள்ளே விடக் கூடாது என சொல்லி விருதாச்சலத்தில் இருந்து ஒரு ரெளடி கும்பலை இறக்குகிறார் அறிவுக்கரசி. இதையடுத்து புலிகேசிக்கு போன் போடும் அறிவு, விடிவதற்குள் ஜீவானந்தத்தின் கதையை முடித்தால், நீ என்ன கேட்டாலும் தருகிறேன் என டீலிங் போடுகிறார். இதைக்கேட்டு புலிகேசியும் நள்ளிரவில் தேடுதல் வேட்டையை தொடங்குகிறார். திடீரென இரவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. இதனால் ஜீவானந்தம், பார்கவி இருவருமே பதறிப் போகிறார்கள். உடனே கதவை திறக்கப் போகிறார் பார்கவி.

44
ஜீவானந்தம் - பார்கவிக்கு ஆபத்து

அவரை தடுத்து நிறுத்துகிறார் ஜீவானந்தம், அதையும் மீறி கதவை திறக்க முயல்கிறார் பார்கவி. உடனே எங்க போற என மிரட்டுகிறார் ஜீவானந்தம். வெளிய போய் பார்க்கலாம் சார் என பார்கவி சொல்ல, ரெண்டு பேரும் போனா செத்துருவோம், அதனால் நான் முதலில் போய் பார்க்கிறேன் என கூறிவிட்டு வெளியே உருட்டுக் கட்டையுடன் செல்கிறார் ஜீவானந்தம். கண்ணாடி ஜன்னல் வழியாக நோட்டமிடும் பார்கவி, பேரதிர்ச்சியுடன் பார்க்கிறார். வெளியே சென்ற ஜீவானந்தத்துக்கு என்ன ஆனது? புலிகேசி டீம் அவரை போட்டுத் தள்ளியதா? என்பதற்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories