கோலிவுட்டில் இது புதுசு... முதன்முறையாக ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா..?

Published : Dec 23, 2022, 08:41 AM IST

கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, தற்போது முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
கோலிவுட்டில் இது புதுசு... முதன்முறையாக ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா..?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, யோகிபாபு, ஷிவ ராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

24

இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆனார் ரஜினிகாந்த். அதில் ஒன்று லால் சலாம். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. இதேபோல் லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்க உள்ள மற்றொரு படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக இருந்தது.

இதையும் படியுங்கள்... வணங்கானை தொடர்ந்து வாடிவாசலில் இருந்தும் வெளியேறுகிறாரா சூர்யா..? தீயாய் பரவும் தகவல் - பின்னணி என்ன?

34

ஆனால் அவரின் ஸ்கிரிப்ட் திருப்தி அளிக்காததால் ரஜினி நோ சொல்லிவிட்டார். இதையடுத்து லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு அந்த வாய்ப்பு சென்றது. அவர் தான் ரஜினியின் 171-வது படத்தை இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தற்போது அப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் சொல்வதற்காக லண்டன் சென்றுள்ளார் பிரதீப்.

44

விரைவில் இதுகுறித்த குட் நியூஸ் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அண்மனையில் பிரதீப் - யுவன் காம்போவில் வெளியான லவ் டுடே திரைப்படமும் அப்படத்தின் பாடல்களும் வேறலெவல் ஹிட் அடித்தன. இதனால் தலைவர் 171 படத்திலும் இந்த கூட்டணி தொடர உள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் ரஜினி படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சீண்டுனா சிரிப்பவன் சுயவழி நடப்பவன்' துணிவு மூன்றாவது பாடல் 'கேங்ஸ்டா' ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!

Read more Photos on
click me!

Recommended Stories