பிரபல நடிகை கனகா வீட்டில் தீ விபத்து..! துணிமணிகள் எரிந்து நாசம்..!

First Published | Dec 22, 2022, 11:22 PM IST

பிரபல நடிகை 'கரகாட்டக்காரன்' கனகா வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 

மறைந்த பழம்பெரும் நடிகை, தேவிகாவின் மகள் கனகா. இவர் பாடகியாக வேண்டும் என்கிற ஆசையில் வாய்ப்பு தேடிய நிலையில், எதிர்பாராத விதமாக நடிகையாக மாறினார். இவர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், இயக்கத்தில் வெளியான 'கரகாட்டக்காரன்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதால், இந்த படத்தின் பெயரை இவருக்கு அடையாளமாகவும்  மாறியது.

தற்போது வரை ரசிகர்களால் 'கரகாட்டக்காரன்' கனகா என்று அடையாளம் காணப்படும் இவர், சுமார் கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகியே உள்ளார். காதல் தோல்வி, காரணமாக திருமணம் செய்து கொள்ளலாம் நடிகை கனகா வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் உடல்நல பிரச்சனை காரணமாகவும் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

Tap to resize

கடந்த ஆண்டு இவர் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், திரை உலகை விட்டு விலகி பல வருடங்கள் ஆகிவிட்டதால், நான் என்ன செய்தாலும் அது பழையதாக மட்டுமே இருக்கும். எனவே என்னுடைய உடை, சிகை அலங்காரம், மேக்கப், செருப்பு, என அனைத்தையும் தற்போதைய காலத்திற்கு ஏற்ற போல் மாற்றிக் கொள்ள வேண்டும். நடிக்கும் ஆர்வம் உள்ளதால், விரைவாகவே அதனை கற்றுக்கொண்டு மீண்டும் கமபேக் கொடுப்பேன் என்பது போல் கூறி இருந்தார்.

ஒரு மாணவியாக மாறி அனைத்தையும் கற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகவும், அதே நேரம் தனக்கு இப்போது 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால்... இந்த வயதில் இப்படி ஒரு ஆசையா எனக் கூட சிலர் கேட்பார்கள் என்று பல்வேறு விஷயங்களை ரசிகர்களுடன் இவர் பகிர்ந்து கொண்ட வீடியோ மிகவும் பிரபலமானது.

நடிகை கனகா தன்னுடைய தந்தையுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் புரத்தில் உள்ள, தன்னுடைய வீட்டில் வசித்து வரும் நிலையில்... இன்று மாலை இவரது வீட்டில் இருந்து, குபுகுபு என புகை வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், தீயணைப்பு துறைக்கும், தகவல் தெரிவித்தனர்.

 இதைத்தொடர்ந்து மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனகாவின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கிருந்த பல உடைகள் எரிந்து நாசமாகி கிடந்தன. மேலும் புகைந்து கொண்டு இருந்தா தீயையும் தண்ணீர் பீச்சி அணைத்தனர். மேலும் இது குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை செய்த போது, பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது தீப்பொறி பட்டு வீட்டிற்குள் தீ பரவியதாகவும், அதனை கவனிக்காததால் மற்ற இடங்களுக்கும் தீ பரவி... அருகே இருந்த துணிமணிகள் அத்தனையும் எரிந்து நாசம் ஆகியதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos

click me!