மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து இவர் இயக்கிய கைதி படம் அதிரி புதிரியான வெற்றியை ருசித்ததை அடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர், கமலுடன் விக்ரம், விஜய்யின் லியோ என தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் பணியாற்றி வந்தார். தற்போது முதன்முறையாக ரஜினிகாந்த் உடன் அவர் இணைந்து பணியாற்றி உள்ள திரைப்படம் தான் கூலி. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
24
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க நோ சொன்னது ஏன்?
லோகேஷ் கனகராஜ் தரமான இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருள் ஒரு அழகான நடிகரும் இருக்கிறார் என்பதை ஸ்ருதிஹாசனின் இனிமேல் என்கிற ஆல்பம் பாடல் தான் வெளிக்கொண்டு வந்தது. அந்தப் பாடலில் ஸ்ருதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் லோகி. அதில் லோகேஷின் நடிப்பை பார்த்து அவருக்கு சினிமா வாய்ப்பும் வந்துள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு தான் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க வந்திருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டாராம். கூலி பட வேலைகளில் பிசியாக இருந்ததால் அப்படத்திற்கு நோ சொல்லிவிட்டாராம்.
34
லோகேஷ் நடிக்க மறுத்த படம் எது?
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ் நடிக்க மறுத்த படம் வேறெதுவுமில்லை... சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் பராசக்தி திரைப்படம் தான். இதில் தான் லோகேஷை வில்லனாக நடிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் சுதா கொங்கரா. கதை கேட்டு அவருக்கும் மிகவும் பிடித்துப் போனதாம். ஆனால் கூலி பட ஷூட்டிங்கில் பிசியானதால் பராசக்தி படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் லோகி. அவர் நடிக்க மறுத்த பின்னர் அந்த வாய்ப்பு ரவி மோகனுக்கு சென்றிருக்கிறது. அவர் தான் தற்போது பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
பராசக்தி திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன், பேசில் ஜோசப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 100வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது.