ரோலெக்ஸ் சூர்யா போல்... குட்டியான கெஸ்ட் ரோலில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் - அதுவும் யார் படத்துல தெரியுமா?

First Published | Mar 28, 2023, 11:50 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், தற்போது பிரபல நடிகரின் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்ட இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய நான்கு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து கைதி 2, விக்ரம் 2, இரும்புக்கை மாயாவி, ரஜினியுடன் ஒரு படம் என லோகேஷின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது. இப்படி செம்ம பிசியான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், தற்போது படம் ஒன்றில் கேமியோ ரோலிலும் நடித்து இருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து வரும் சிங்கப்பூர் சலூன் என்கிற திரைப்படத்தில் தான் லோகேஷ் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... போன மாசம் கர்ப்பம்... இப்போ அமீருடன் ரகசிய திருமணம்.. அடுத்து என்ன? பிக்பாஸ் பாவனியின் ஷாக்கிங் ரிப்ளை

Tap to resize

விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் சூர்யா வருவதுபோல் சின்ன ரோல் தானாம். இப்படத்தில் ரியாலிட்டி ஷோ நடுவராக லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர நடிகர் ஜீவாவும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருக்கிறாராம். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இதற்கு முன் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் ஒரு சீனில் ஜெயில் கைதியாக நடித்திருப்பார். அதன்பின் எந்தபடத்திலும் கேமியோ ரோலில் தலைகாட்டாமல் இருந்து வந்த அவர், தற்போது தன் நண்பன் ஆர்.ஜே.பாலாஜிக்காக சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  ஆர்.ஆர்.ஆர் குழுவின் ஆஸ்கர் செலவை வெளியிட்ட ராஜமவுலி மகன்... அப்போ 80 கோடினு சொன்னதெல்லாம் உருட்டா..!

Latest Videos

click me!