விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் பாவனி ரெட்டி, இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார். அந்த சீசனில் இவருடன் சக போட்டியாளராக கலந்துகொண்ட அமீர், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பாவனியை துரத்தி துரத்தி காதலித்து வந்தார். ஆனால் அந்த சமயத்தில் அமீரின் காதலை ஏற்காமல் இருந்து வந்தார் பாவனி.
தற்போது அமீரும், பாவனியும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இதனிடையே சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார் பாவனி. அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களுக்கும் அமீருக்கும் திருமணம் ஆனதை நீங்க ஏன் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என கேள்வி எழுப்பினார்.