தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் வெற்றிமாறன். அவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய 5 திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார் வெற்றிமாறன்.
விடுதலை படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அப்படத்திற்கான புரமோஷனும் ஒருபக்கம் படு ஜோராக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதனால் இப்படத்தை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதையும் தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில், விடுதலை படத்தில் சென்சார் போர்டு அதிகாரிகள் கத்திரி போட்ட காட்சிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி 11 இடங்களில் கெட்ட வார்த்தைகளுக்கு மியூட் செய்துள்ளதாகவும், 2 இடங்களில் இடம்பெற்றிருந்த நிர்வாண காட்சிகளிலும் சென்சார் போர்டு கைவைத்துள்ளதாம். காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு இருக்கும் அந்த கெட்ட வார்த்தைகளின் விவரங்களையும் சென்சார் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் வட சென்னை போல இதுவும் ராவான படமாக இருக்கும் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்...திருமணம் லைஃப்ல பெரிய மாற்றத்தை கொண்டு வரும்... மனைவி குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி