விடுதலை, பத்து தல மட்டுமில்ல இந்தவாரம் இத்தனை பிரம்மாண்ட படங்கள் ரிலீஸா? ரசிகர்களுக்கு செம்ம டிரீட் வெயிட்டிங்

First Published | Mar 28, 2023, 8:30 AM IST

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை மற்றும் சிம்பு நடித்துள்ள பத்து தல ஆகிய படங்களுடன் மேலும் சில பிரம்மாண்ட படங்களும் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளன.

பத்து தல

சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. வருகிற மார்ச் 30-ந் தேதி திரைகாண உள்ள இப்படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சிம்பு உடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து உள்ளார்.

விடுதலை

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் வருகிற மார்ச் 31-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், ராஜிவ் மேனன், இளவரசு, பவானி ஸ்ரீ என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... திருமணம் லைஃப்ல பெரிய மாற்றத்தை கொண்டு வரும்... மனைவி குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Tap to resize

தசரா

பத்து தல மற்றும் விடுதலை படங்களுக்கு போட்டியாக நானி நடித்துள்ள தசரா திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். தசரா திரைப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரைகாண உள்ளது.

போலா

மார்ச் 30-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் போலா. இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கைதி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தை அஜய் தேவ்கன் இயக்கியுள்ளதோடு இப்படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் அமலா பால், தபு ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2 தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Latest Videos

click me!