பொன்னியின் செல்வன் 2
2023-ம் ஆண்டு முதலில் ரிலீஸ் ஆக உள்ள பார்ட் 2 திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
பிச்சைக்காரன் 2
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் பிச்சைக்காரன். இப்படத்தை சசி இயக்கி இருந்தார். தற்போது உருவாகி இருக்கும் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சந்திரமுகி 2
பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ரஜினி நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
சார்பட்டா பரம்பரை 2
பா.இரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகி வெற்றிபெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் விடுதலை. சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் 31-ந் தேதி ரிலீசாக உள்ளது. அப்படம் வெளியான அடுத்த மூன்று மாதத்தில் அதன் இரண்டாம் பாகத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இந்தியன் 2
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்,
டிமாண்டி காலனி
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸாகி வெற்றியடைந்த திரைப்படம் டிமாண்டி காலனி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்துவே தயாரித்து இயக்கி வருகிறார். இப்படமும் விரைவில் திரைகாண உள்ளது.