10 பெண்களுடன் உடலுறவு வைத்திருப்பதாக கூறிய ஜெயிலர் பட நடிகரை விவாகரத்து செய்து பிரிந்த மனைவி

First Published | Mar 27, 2023, 10:47 AM IST

ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் விநாயகன் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் விநாயகன். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திமிரு படம் மூலம் தமிழில் வில்லனாக எண்ட்ரி கொடுத்த விநாயகன், அப்படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் அடியாளாக நடித்திருப்பார். அப்படத்திற்கு பின்னர் தனுஷின் மரியான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விநாயகன்.

இதையடுத்து 11 ஆண்டுகளாக தமிழ் திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்த இவர், தற்போது ஜெயிலர் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வரும் இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விநாயகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... 1300 கோடி சொத்துக்கு அதிபதி... சினிமாவை தாண்டி இத்தனை தொழில் செய்கிறாரா ராம்சரண்? - வியக்க வைக்கும் பின்னணி

Tap to resize

இந்நிலையில், நடிகர் விநாயகன் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து மீடு சர்ச்சையில் சிக்கி வந்ததால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தனது மனைவி பபிதாவை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக தனது சமூக வலைதள பக்கம் மூலம் அறிவித்துள்ளார் விநாயகன். 

நடிகர் விநாயகன் மீது கடந்தாண்டு மாடல் அழகி ஒருவர் மீடூ புகார் தெரிவித்து இருந்தார். அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த விநாயகன், இதுவரை தான் 10 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும், அந்த பெண்களின் சம்மதத்துடன் தான் அவ்வாறு செய்ததாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த விவகாரம் தான் அவரது குடும்பத்திலும் பூகம்பத்தை ஏற்படுத்தி தற்போது விவாகரத்து செய்யும் நிலைக்கு தள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மாஸ் வீடியோ உடன்... ராம்சரண் உடனான பிரம்மாண்ட படத்தின் டைட்டிலை அறிவித்த இயக்குனர் ஷங்கர்

Latest Videos

click me!