திருமணம் லைஃப்ல பெரிய மாற்றத்தை கொண்டு வரும்... மனைவி குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

First Published | Mar 28, 2023, 7:49 AM IST

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள படம் ஆகஸ்ட் 16 1947. பொன்குமார் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார்.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது : “1947 திரைப்படம் நம் சுதந்திரத்தின் கதை. சுதந்திரத்திற்காக நிறைய பேர் கஷ்டப்பட்டு இருக்கிறார். அதைத்தாண்டி ஒரு வலி நிறைந்த விஷயத்தை தான் இப்படத்தில் இயக்குனர் கொடுத்திருக்கிறார். டிரைலர் பார்க்கும்போதே எல்லாருடைய உழைப்பும் தெரிகிறது. முதல் படமே வரலாற்று கதையம்சம் உள்ள படமாக தேர்வு செய்துள்ள இயக்குனர் சவாலை சந்திக்க தயாராக இருக்கிறார். சவாலை சந்திக்க ரெடியாக இருக்கிறார் என்றால் அவர் சாதிக்கவும் தயாராக இருக்கிறார் என்பது தான் அர்த்தம். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2 தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Tap to resize

கவுதம் கார்த்திக்கை சந்தித்த பிறகு தான் நான் கார்த்திக் சாரை பார்த்தேன். கார்த்திக் சாரின் நடிப்பு தனித்துவமாக இருக்கும். ஒரு பெரிய ஹீரோவின் பையன் என கவுதம் எப்போதும் காட்டிக் கொண்டதில்லை. திருமணத்துக்கு பின் வாழ்க்கையே மாறி இருக்கும். அது ஒரு பொறுப்புன்னு கூட சொல்லலாம். நான் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்ட பிறகு தான் எனக்கு தனியாக நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. திருமணம் தான் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும்.

ஏ.ஆர்.முருகதாஸ் சாரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் ஏழாம் அறிவு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பின்னால் இருந்து பணியாற்றினேன். இதையடுத்து அவர் தயாரித்த எங்கேயும் எப்போதும் பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினேன். பின்னர் அவரது தயாரிப்பில் மான் கராத்தே படத்தில் நடித்தேன். தற்போது அவர் தயாரிக்கும் படத்தின் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன். விரைவில் வேறு ஒரு பெரிய விஷயமும் நடக்க உள்ளது என ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் படம் குறித்து சூசகமாக அறிவித்தார் சிவா.

தொடர்ந்து பேசிய அவர், ஒருத்தர் வளர்த்தா சந்தோஷப்படுபவர்கள் நிறைய பேர் இருப்பாங்க. ஆனா எப்படியாவது என் கூட இருக்குறவங்க வளர்ந்துடனும்னு ஆசைப்படுபவர்கள் ரொம்ப கம்மி தான். வீரம் படத்துல அஜித் சார் சொல்ற மாதிரி, கூட இருக்குறவங்கள நாம பாத்துக்கிட்டா, மேல இருக்குறவன் நம்மள பாத்துக்குவான்னு சொல்லி, எப்பவுமே நீங்க நினைக்கும் விஷயங்கள் எல்லாம் பெருசா நடக்கும் என முருகதாஸை வாழ்த்தி தன் உரையை முடித்துக்கொண்டார் சிவகார்த்திகேயன்.

இதையும் படியுங்கள்... விடுதலை 2 முதல் இந்தியன் 2 வரை : 2023-ல் மட்டும் இத்தனை இரண்டாம் பாக படங்களா? லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது..!

Latest Videos

click me!