இதற்கு அடுத்தபடியாக 5 சீட்டர் எஸ்.யூ.வி கார் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார் அனுஷ்கா. Audi-யின் Q5 மாடலான இதன் விலை ரூ.65 லட்சம் இருக்குமாம். வெகுதூர பயணங்களுக்காக இந்த காரை நடிகை அனுஷ்கா பயன்படுத்துவாராம். இந்த கார் கடந்த 2021-ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டதாகும்.
அனுஷ்காவின் கார் கலெக்ஷன்களில் அடுத்ததாக உள்ள கார் Audi A6. இதன் விலையும் ரூ.65 லட்சம் இருக்கும். இந்த கார் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதாகும். இது 5 சீட்டர் வசதி கொண்ட சொகுசு கார் ஆகும்.