நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டு இடைவெளிக்கு பின் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாபாத்திர தேர்வு, அனிருத்தின் இசை ஆகியவை மிகப்பெரிய பலமாக அமைந்தன. விஜய் சேதுபதியின் சந்தனம் கேரக்டர், பகத் பாசிலின் அமர் கேரக்டர், நரேனின் பிஜாய் கேரக்டர் என ஒவ்வொன்றும் மனதில் பதியும்படி இருந்தன.
24
குறிப்பாக வசந்தி நடித்த ஏஜெண்ட் டீனா மற்றும் சூர்யா நடித்த ரோலெக்ஸ் ஆகிய கேரக்டர்கள் இப்படத்தில் கொஞ்சம் நேரம் வந்தாலும் அவை ஏற்படுத்திய தாக்கம் மிகவும் பெரிது. இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டது. உலகளவில் ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
தியேட்டர்களில் அமோக வரவேற்பை பெற்ற விக்ரம் திரைப்படம் கடந்த ஜூலை 8-ந் தேதி ஓடிடி-யில் வெளியிடப்பட்டது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசான இப்படம் அதிலும் சாதனை படைத்துள்ளது. அதன்படி வெளியான முதல் வாரத்திலேயே ஓடிடியில் அதிக பார்வைகளை பெற்ற படம் என்கிற சாதனையையும், அதிக சந்தாதாரர்கள் மற்றும் அதிக நேரம் பார்க்கப்பட்ட படம் போன்ற பல்வேறு சாதனைகளை விக்ரம் படைத்துள்ளது.
44
இதுவரை ஹாட்ஸ்டாரில் வெளியான படங்களில் எந்த ஒரு படமும் நிகழ்த்தாத மாபெரும் சாதனையை இப்படம் நிகழ்த்திக் காட்டி உள்ளது. தியேட்டரை தொடர்ந்து ஓடிடி-யிலும் விக்ரம் படம் சாதனை படைத்து வருவதனால் படக்குழுவினரும், நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.