மிதாலி ராஜ் மற்றும் இயக்குனர் ஸ்ரீ முகர்ஜி ஆகியோருடன் டாப்சி தனது சபாஷ்மிது திரைப்படத்தின் விளம்பரத்திற்காக டெல்லி வந்திருந்தார். அப்போது பேசியவர் இந்த படம் தனக்கு மிகுந்த சவாலாக இருந்ததாகவும், நாங்கள் இருவரும் தனிநபர்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறோம். வாழும் சாதனையாளர்கள் போல நடிப்பது மிமிக்கிரி போய் மிகவும் திறமையானது எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படம் அனைவருக்கும் விருப்பம் உள்ள கிரிக்கெட் அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்றும் கிரிக்கெட் வீரரை சுற்றியுள்ள கதை என்பதால் மிகவும் கவனம் ஈர்க்க கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.