பொதுவாக பிரியாணி என்பது ஏராளமானோருக்கு பிடித்தமான உணவாக உள்ளது. இதன் காரணமாகவே இதன் மீதான மோகம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த பிரியாணி தான் முன்னணி நடிகைகள் பலருக்கும் பேவரைட் உணவாக இருக்கிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள என்னதான் டயட் இருந்தாலும், பிரியாணியை பார்த்ததும் டயட்டையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிடும் நடிகைகள் ஏராளம்.