லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் 'லியோ'. கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்தில் திரிஷா, மிஷ்கின், கெளதம் மேனன், ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக லியோ இருந்தது. இப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர்களான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் கூறியிருந்தது. ஆனால், படத்தின் உண்மையான வசூல் அவ்வளவு இல்லை என்பது தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் லியோ படத்தின் வசூல் பேசு பொருள் ஆகி உள்ளது.
24
லியோ ஒரிஜினல் வசூல் எவ்வளவு?
600 கோடி ரூபாய் வசூல் செய்ததாகக் கூறப்பட்ட லியோ படத்தின் வசூல் 404 கோடி ரூபாய் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் வருமான வரித் தாக்கலில் குறிப்பிட்டுள்ளனர். 200 கோடி ரூபாய் வித்தியாசத்தைக் குறிப்பிட்டு, தற்போது சமூக ஊடகங்களில் லியோ பட வசூல் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது. லியோவின் வசூல் என்ற பெயரில் தயாரிப்பாளர்கள் ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் தொகையை விளம்பரப்படுத்தினர் என்று சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
34
சர்ச்சையில் சிக்கும் விஜய் படங்கள்
முன்னதாக, விஜய்யின் 'வாரிசு' படமும் இதேபோல் வசூல் சர்ச்சையில் சிக்கியது. இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான 'கூலி' சிறப்பான வசூல் செய்து வருகிறது. லியோவின் வசூல் தொடர்பான விவகாரம், ரஜினி - விஜய் ரசிகர்களிடையே சமூக ஊடகப் போருக்கு வழிவகுத்துள்ளது. லோகேஷ் - ரஜினி கூட்டணி முதல்முறையாக இணைந்த 'கூலி' படத்திற்கு ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்துள்ளது.
கூலி படத்தின் திரைக்கதையை லோகேஷும் சந்திரகுமாரும் இணைந்து எழுதியுள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் தேவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூலி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்திலேயே உலகளவில் 450 கோடி வசூலித்திருக்கிறது. லேட்டஸ்ட் தகவல்படி பார்த்தால் அது லியோ லைஃப்டைம் வசூலையே முந்தி இருக்கிறது.