ஓடிடியில் இந்த வாரம் மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒன்று பேரன்பும் பெருங்கோபமும். இப்படத்தை சிவப்பிரகாஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் தங்கர் பச்சான் மகன் விஜித் நாயகனாக நடித்துள்ளார். மேலும் அருள்தாஸ், மைம் கோபி, தீபா ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக போஜன் பணியாற்றி உள்ளார். வீர சக்தி தயாரித்துள்ள இப்படம் இன்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
24
தலைவன் தலைவி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் தலைவன் தலைவி. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் தீபா, காளி வெங்கட், செண்ட்ராயன், சரவணன், ரோஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
34
மாரீசன்
இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்றொரு திரைப்படம் மாரீசன். இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். இப்படத்தில் வடிவேலுவும், பகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கோவை சரளா, சிதாரா, விவேக் பிரசன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.